கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தனுஷ் பட இயக்குநர் கார்த்திக் நரேன்
சென்னை : கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
திரைத்துறை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் பட இயக்குநர் கார்த்திக் நரேனும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும் படம் குறித்த அறிவிப்பையும் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு
தனுஷின் டி43 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன். சமீபத்தில் ரசிகர்களுடன் மேற்கொண்ட ஆன்லைன் உரையாடலில் அவர் படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். தற்போது லாஸ் ஏஞ்சல்சில் தனுஷ் உள்ள நிலையில் அவர் இந்தியா வந்தவுடனே உடனடியாக படப்பிடிப்பை துவங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் மியூசிக்
இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக ஜாய்ன் ஆகியுள்ள நிலையில் திரில்லர் படமாக இது உருவாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

முதல் டோசை போட்ட கார்த்திக்
அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்துள்ள பிரசன்னாவும் டி43 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மகேந்திரனும் இந்த படத்தில் நடிக்கிறார். இதனிடையே கார்த்திக் நரேன் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.

பாதுகாப்பாக இருக்க ஆலோசனை
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதுடன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திரை பிரபலங்கள் அதை தங்களது சமூக வலைதளங்களில் அறிவிப்பதால் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











