தனுஷ் -கார்த்திக் நரேன் இடையே மனஸ்தாபம்... வெளியேற்றப்பட்டாரா டைரக்டர்? படக்குழு விளக்கம்

ஐதராபாத் : நடிகர் தனுஷ் நடிப்பில், மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்துள்ள படம் டி43. இந்த படத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தனுஷ், நேரடியாக ஐதராபாத்தில் நடந்துவரும் இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக படத்திலிருந்து கார்த்திக் நரேன் நீக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு

ஐதராபாத்தில் படப்பிடிப்பு

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் டி43. இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ் ஐதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சூட்டிங்கின்போது சண்டை

சூட்டிங்கின்போது சண்டை

சூட்டிங் ஜரூராக நடைபெற்று வந்த நிலையில், சூட்டிங்கின்போது தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இருவருக்கும் இடையில் சில காட்சிகளில் சண்டை ஏற்பட்டதாகவும் இதையடுத்து இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

சுப்ரமணியம் சிவா உதவி

சுப்ரமணியம் சிவா உதவி

நேற்றைய தினம் படப்பிடிப்பின்போது கார்த்திக் நரேன் சூட்டிங் ஸ்பாட்டில் இல்லாத நிலையில், திருடா திருடி இயக்குநர் சுப்ரமணியம் சிவாவுடன் இணைந்து டைரக்ஷன் பணிகளை தனுஷ் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. இதையடுத்து கார்த்திக் நரேன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவந்தது.

வதந்தி என விளக்கம்

வதந்தி என விளக்கம்

இதனிடையே, இந்த தகவல்களை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ், இவை வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் சூட்டிங்கில் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் பிசியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X