துப்பாக்கில எப்படி சுடனும் தெரியுமா? க்ளாஸ் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. தெறிக்கும் தோட்டாக்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான இயக்குநர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு நடிகரின் கால் ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருந்த இயக்குநர்கள்தான் அதிகம். ஆனால் இன்றைக்கு மிகவும் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களைக் கொண்டே அட்டகாசமான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றார். அந்தவகையில் தன்னை தமிழ் சினிமாவின் அங்கமாக அடையாளமாக மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது சூர்யாவை வைத்து சூர்யா 44 படத்தினை இயக்கி வருகின்றார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது அவர் துப்பாக்கியில் சுடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், குறும்படங்கள் எடுத்தும், நாளைய இயக்குநர் போட்டிகளில் கலந்து கொண்டும் தனது திறமையையும் வெளிக்காட்டினார். தனது முதல் படமான பீட்சா அதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தின் மூலம் கொடுத்த மாபெரும் வெற்றி, தேசிய விருது, ரசிகர்களின் கொண்டாட்டம் என கார்த்திக் சுப்புராஜின் திறமையை தமிழ் சினிமா அங்கீகரித்தது.

இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், தனது அட்டகாசமான கதை, திரைக்கதையால் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றார். பீட்சா, ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.
சூர்யா 44: தற்போது நடிகர் சூர்யாவை வைத்து சூர்யாவின் 44வது படத்தினை இயக்கி வருகின்றார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மேலும் படத்தினை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படத்தினை இந்த மாத இறுதியொலோ அல்லது அடுத்த மாத தொடக்கதிலேயோ முடித்துவிட்டு படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் ஈடுபட படக்குழு தயாராக உள்ளது என கூறப்படுகின்றது.

வீடியோ: மேலும் வரும் நவம்பர் 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேநேரத்தில் இந்த மாதத்தில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கு ஏற்றவகையில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்நிலையில் சூர்யா 44 படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மியான அதிநவீன துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர், துப்பாக்கியில் எப்படி சுடவேண்டும் என கற்றுக்கொடுக்கின்றாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











