இந்தியன் 2 பார்த்த கார்த்திக் சுப்புராஜ்! இவரு என்னங்க இப்படி சொல்றாரு! குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன படங்களில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை. இதனால் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்தின் மீது அதிகப்படியான எதிபார்ப்பு எழுந்தது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இது கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Karthick Subburaj Indian 2 Kamal Haasan Shankar

விமர்சனம்: இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துக்க்கொண்டு இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி இருக்கும்போது படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்தும் விமர்சகர்கள் தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பல விமர்சகர்களும் தமிழ்நாடு குறித்து பேசாமல் ஏன் வெள் மாநிலங்கள் குறித்து பேசவேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Karthick Subburaj Indian 2 Kamal Haasan Shankar

ப்ளூ சட்டை மாறன்: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு படி மேலே போய், படத்தையும் படக்குழுவினரையும் பங்கமாக கலாய்த்து வருகின்றார். குறிப்பாக தனது எக்ஸ் பக்கத்தில், இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல் ஹாசனும் பேசிக் கொள்வதைப் போல் மீம் பகிர்ந்துள்ளார். அதில், ஷங்கர் கமல்ஹாசனிடம், " உன் கட்சிக்காரர்களை பார்க்க வைத்தாவது படத்தை ஹிட் ஆக்கிவிடு எனக் கூறுவதைப் போலவும், அதற்கு கமல், எனது கட்சியில் என்னைத் தவிர யாருமே இல்லை என பதில் கூறுவதைப் போலவும் அமைக்கப்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த மீமிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இன்றைக்கு இணையத்தில் உலாவரும் முக்கிய செய்தியே, ஒரு படத்தின் டிக்கெட் என்னிடம் உள்ளது. அதற்கு பாதி விலை கொடுத்தால் போதும் என டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் புலம்புவதுதான் என இந்தியன் 2 படத்தை குறிப்பிடாமல் கலாய்த்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்: இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தியன் 2 படம் பார்த்த பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ இந்தியன் 2 படம் பார்த்தேன். படம் சூப்பராக உள்ளது. தான் நினைத்ததை திரையில் கொண்டு வர ஷங்கரைப்போல் யாராலும் உயிரைக் கொடுத்து வேலை செய்ய முடியாது என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். திரையில் நினைத்ததைக் கொண்டு வருவதில் நீங்கள் என்றக்குமே உத்வேகமாக உள்ளீர்கள் ஷங்கர் சார்.

Karthick Subburaj Indian 2 Kamal Haasan Shankar

சேனாபதி இண்ட்ரோ: உலக நாயகன் கமல்ஹாசன் சாரின் நடிப்பு எப்போதும் போல நெருப்பு பறக்கும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக இந்தியன் படத்தின் தீமுடன் சேனாபதி கதாபாத்திரத்தின் இண்ட்ரோ வரும்போது பார்க்கையில் நாஸ்டாலிஜிக்காக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாகவே கையாண்டுள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசனும், எஸ்.ஜே. சூர்யாவும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் நடிப்பு நம்மை பிரமிக்கவைக்கும் அளவிற்கு உள்ளது. படத்திற்கு இசை அமைத்த அனிருத், ஒளிபதிவாளர் ரவி வர்மன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X