Actor Suriya: விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறாரா சூர்யா.. கார்த்திக் சுப்புராஜ் சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கி வருகிறார். அவரது நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இந்தப்படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்புடன் வெளியான போஸ்டர் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Karthik subbaraj clears the air that Suriya acts in story narrated to Vijay

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியுடன் இணைந்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து வெற்றிப்பட நாயகனாக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அவர் இருந்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டில் கர்ணா படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது படங்கள் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா: படத்தை இயக்குனர் சிவா இயக்கி முடித்துள்ளார். படம் வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சூர்யாவின் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சூர்யா இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சூர்யா 44 படம்: இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்கு சிறிது காலம் தேவைப்படுவதால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போவதாக சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்த இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

கேங்ஸ்டர் + காதல்: இந்தப் படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதையை முன்னதாக விஜய்க்காக கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியதாகவும் அந்த கதையில் விஜய் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் சூர்யாவிற்கு அந்த கதையை கூறி ஓகே வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த கதை சூர்யாவிற்காகவே உருவாக்கப்பட்டதாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் தரப்பு தெளிவுபடுத்தி உள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் உருவான காலகட்டத்திலேயே சூர்யாவிற்காக இந்த கதையை தான் கூறியதாகவும் தொடர்ந்து சூர்யா இதை இந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாக உருவாக்க கூறியதால் தான் அதற்கான வேலைகளில் ஈடுபட்டதாகவும் தற்போது ஸ்கிரிப்ட் ரெடி ஆகி ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் விஜய்க்காக உருவாக்கிய கதைக்களத்தில் சூர்யா நடிக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X