Vijay - கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் விஜய்?.. சம்பவம் காத்திருக்கு
சென்னை: Vijay (விஜய்) விஜய்யிடம் விரைவில் கதை சொல்லவிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.

ஜிகர்தண்டா: அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.
ஃபேன் பாய் சம்பவம்: உச்சக்கட்டமாக ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பார்த்து பேட்ட படத்தை செதுக்கியிருந்தார். குறிப்பாக சிறு வயதில் தான் பார்த்து ரசித்த ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஃப்ரேமையும் அவ்வளவு அழகாக வைத்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அவர் இயக்கிய மெர்க்குரி ஃப்ளாப்பாக தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாக வேலையில் பிஸியாக இருக்கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரை வைத்து படம் உருவாகியிருக்கிறது. படத்தின் டீசரை பார்க்கும்போதே நிச்சயம் இதனை வித்தியாசமான முறையில் கார்த்திக் சுப்புராஜ் ப்ரெசண்ட் செய்வார் என ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். படமானது தீபாவளிக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா மறு வெளியீடு: இந்நிலையில் ஜிகர்தண்டா வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய கார்த்திக் சுப்புராஜ், "விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எப்போதுமே எனக்கு விருப்பம்தான். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் முடிந்த பிறகு அவரை சந்தித்து கதை கூறுவேன். கண்டிப்பாக அது விஜய்யின் கரியரில் சிறந்த படமாக இருக்கும்" என்றார்.
விஜய்யின் லைன் அப்: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என கருதப்படுகிறது. அதேசமயம் தானும் கதை சொல்லப்போவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருப்பதால் ஒருவேளை 69ஆவது படம் கார்த்திக்கின் கைகளுக்கு போக வாய்ப்புகள் இருக்கின்றனர் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











