ஜிகர்தண்டா 2 முதல் பாகத்தின் சீக்வெல் இல்லை… இது வேற லெவல் படம்: கார்த்திக் சுப்புராஜ் ட்விஸ்ட்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

சிலிர்க்க வைத்த ஜிகர்தண்டா
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ், 'பீட்சா' மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்த 'பீட்சா' ஹாரர் திரில்லர் ஜானரில் சூப்பர் ஹிட் அடித்தது. கார்த்திக் சுப்புராஜ்ஜின் வித்தியாசமான மேக்கிங், விஜய் சேதுபதியின் ஆக்டிங், இந்தப் படத்தை தனித்து அடையாளம் காட்டியது. இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா', இன்னும் வேறலெவலில் மாஸ் காட்டியது.

மாஸ் காட்டிய பாபி சிம்ஹா
சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் ஆகியோர் 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்திருந்தனர். இதில், கொடூரமான கேங்ஸ்டர் கேரக்டரில் மிரட்டியிருப்பார் பாபி சிம்ஹா. ஆனால், அவரது ரியலான தோற்றம் வெளிவரும் போது செம்ம ரகளையாக இருக்கும். இந்த கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹா, சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். மேலும் சிறந்த படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது. பாபி சிம்ஹாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான், ஆனால் அந்த வாய்ப்பை பாபி சிம்ஹாவே கேட்டு வாங்கியுள்ளார்.

ரெடியாகும் ஜிகர்தாண்டா 2
ஜிகர்தண்டா திரைப்படம் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. கேங்ஸ்டர் ஜானரில் ப்ளாக் காமெடியை வைத்து அதகளம் செய்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே ஸ்க்ரிப்ட் பேப்பரை ட்விட்டரில் ஷேர் செய்து, கன்ஃபார்ம் செய்துவிட்டார். இதில், எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு முக்கியமான கேரக்டரில் பான் இந்தியா ஸ்டார் ஒருவர் கமிட் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

முதல் பாகத்தின் சீக்வெல் இல்லை
"வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்..." என்ற லீடில், ஜிகர்தண்டா 2 உருவாகும் என ஏற்கனவே அப்டேட் கொடுத்துவிட்ட கார்த்திக் சுப்புராஜ், இப்போது இன்னொரு தகவலையும் கூறியுள்ளார். 'பஃபூன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ்ஜிடம், ஜிகர்தண்டா 2 குறித்து கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்துள்ள அவர், 'ஜிகர்தண்டா 2 முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இந்தக் கதை முற்றிலும் புதுசாக இருக்கும். இதுக்கும் முதல் பாகத்துக்கும் எந்த தொடர்பும் இருக்காது" என தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார். ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











