Karthik Subbaraj: விஜய்க்கு ஸ்டோரி ரெடி.. விரைவில் அவரை சந்திப்பேன்.. கார்த்திக் சுப்புராஜ் உறுதி!

சென்னை: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்ட ரிலீசாக வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின்மூலம் மீண்டும் தன்னுடைய மாஸை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Director Karthik Subbaraj make story for Actor Vijay and he wants to narrate him


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து கவனத்திற்குரிய இயக்குநராக இந்திய அளவில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் ஜிகர்தண்டா XX படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி கொண்டாட்ட ரிலீசாக நேற்றைய தினம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.

ஜிகர்தண்டா XX படம்: 1975ம் ஆண்டு காலகட்டத்தை மையமாக கொண்டு ஜிகர்தண்டா XX படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சிறப்பான வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜிகர்தண்டா XX ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்கு கிடைத்துவரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உற்சாகமடைந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் உற்சாகப் பேட்டி: இதனிடையே அவர் அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். நாலரை ஆண்டுகளுக்கு பின்பு திரையரங்குகளில் தன்னுடைய படம் வெளியாகியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடவுளின் மிகப்பெரிய பரிசு யானைகள் மற்றும் சினிமா என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ள அவர், படத்தில் இடம்பெற்றுள்ள சிறிய சிறிய சர்ப்பிரைஸ்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


விஜய்க்கு கதை ரெடி செய்த கார்த்திக் சுப்புராஜ்: தற்போது நடிகர் விஜய்க்காக தான் கதையை ரெடி செய்துள்ளதாகவும் தளபதி 68 படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு தன்னுடைய கதையை சொல்வேன் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக இறைவி படத்தின் போது, பேட்ட ரிலீசாகிய நிலையில், தான் விஜய்க்கு வித்தியாசமான 2 கதைகளை சொல்லியதாகவும் ஆனால் அந்த கதைகள் அவரை இம்ப்ரஸ் செய்யவில்லை என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

ரஜினிக்கும் கதை: மேலும் புதிய கதைகளை தயார் செய்துவிட்டு வந்து பார்க்குமாறு விஜய் கூறியதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். தற்போது விஜய்க்கான ஸ்கிரிப்ட் ரெடியான நிலையில் விரைவில் அவரை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார். இதேபோல அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் வில்லேஜ் டைப்பில் கதையை உருவாக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் அந்த கதை ரஜினிக்கு பிடிக்காததால் அது கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் ரஜினிக்கும் கதையை உருவாக்கி அவரிடம் சொல்லி ஓகே வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X