சூர்யா 44 பட ரிலீஸ் அப்டேட் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.. அட அதையும் பேசியிருக்காரே!

சென்னை: நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூர்யா 44 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்கி மற்றும் சூர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் சூர்யா 44 படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் கதைக்களம் குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 14ம் தேதி வெளியான சூர்யாவின் கங்குவா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படத்தை அவர் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்.

suriya suriya 44 movie karthik subbaraj


நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். ஆயினும் எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவரது படங்கள் வெளியாகாத நிலையில், கடந்த 14ம் தேதி கங்குவா படம் வெளியானது. சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு அமையாத நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இணைந்து தயாரித்துள்ளார்.

சூர்யா 44 படம்: கங்குவா படத்தை அதிகமாக எதிர்பார்த்திருந்தார் சூர்யா. இந்தப் படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா 44 படத்தை அதிகமாக எதிர்பார்த்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்: படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டத்தையொட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், அடுத்தமாதத்திலிருந்து இந்தப் படத்தின் பிரமோஷன்களை திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து கேங்ஸ்டர் கதைக்களங்களில் படங்களை கொடுத்துவரும் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்தில் காதலை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் காதல் படத்தை எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி சூர்யா 44 படம் இருக்கும் என்று கூறியிருந்தார்.

அடுத்த மாதத்தில் டைட்டில் அறிவிப்பு?: இந்நிலையில் இந்தப்படத்தின் பிரமோஷன்கள், ரிலீஸ் உள்ளிட்டவற்றை தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படம் ரிலீசாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X