அசத்தலான சியான் 60… இதுதான் டைட்டில்… வெளியான சீக்ரெட் !

சென்னை : சியான்60 படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரமின் 60வது திரைப்படமான இப்படத்தில், தந்தை மகன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

சீயான்60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சீயான் 60

சீயான் 60

சீயான் 60 ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீஸாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, முத்துக்குமார், சனத் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டான்

விக்ரம் கடைசியாக கடாரம் கொண்டான் படம் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் "பொன்னியின் செல்வன்" படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் "கோப்ரா" படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' எஸ். விமல் இயக்கத்தில், மகாவீர் கர்ணன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

விக்ரம் 60' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கியது. இதையடுத்து, கொரோனா இரண்டாவது அலையால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதும் தொடக்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த நிலையில் சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். சீயான்60 திரைப்படத்தின் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20ந் தேதி வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிந்து இருந்தார்.

டைட்டில் இதுதான்

டைட்டில் இதுதான்

தற்போது சீயான்60 படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. "மகான்" என்ற தலைப்பை இயக்குனர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது 20ந் தேதி தான் தெரியவரும். சீயானின் ரசிகர்கள் படத்தின் டைட்டிலை தெரிந்த கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

கார்த்திக் சுப்பிராஜின் ஜகமே தந்திரம், துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா ஆகியவை தோல்வியடைந்த நிலையில், இருவருக்கும் முக்கியமான படமாக சீயான் 60 பார்க்கப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X