தியேட்டரில் மாஸ் காட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்!
சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 10ந் தேதி தியேட்டரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

முதல் நாளில் ரூ.2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.21 கோடி வசூலை அள்ளிய இத்திரைப்படம், ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.45 கோடி வசூலானது. இதனால், தயாரிப்புக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: 1975ல் நடக்கும் பீரியட் படமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படத்துக்கு சூப்பர் கலெக்ஷன் கிடைத்தது. அதன்படி, முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மாஸ் காட்டி ரூ50 கோடியை நெருங்கி வருகிறது.
குறிஞ்சி மலர்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எஸ்.ஜே சூர்யா,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது, உண்மையில் இந்த திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் குறிஞ்சி மலர் போன்று அறிய படைப்பு. இந்த படத்தை மக்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மாபெரும் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் சம்பளம்: இந்நிலையில், இந்த படத்துக்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அவர் ரூ.7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











