Karthik Subbaraj: ரஜினிதான் இன்ஸ்பிரேஷன்.. ஜிகர்தண்டா 2 குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப்படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். முன்னதாக அவரது ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர்ஹிட்டானது.

இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகம் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தீபாவளியையொட்டி இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தமிழக வெளியீட்டு உரிமை: இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் ட்ரெயிலரில் முதல் கருப்பு ஹீரோ போன்ற கலர்புல் வசனங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ரஜினிதான் இன்ஸ்பிரேஷன்: 1975 காலகட்டத்தில் இருந்து இந்த படத்தின் கதைக்களம் பயணிப்பதாக உள்ள நிலையில், ரஜினிகாந்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தப் படதின் கதையை எழுதியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 1975ம் ஆண்டில்தான் ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியானது. தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவான ரஜினிகாந்த் அறிமுகமான இந்த ஆண்டை தன்னுடைய கருப்பு ஹீரோ கேரக்டருக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 மொழிகளில் வெளியாகும் ஜிகர்தண்டா 2: இந்த விஷயம் தன்னுடைய படத்தின் ஸ்கிரிப்டை எழுதுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது கதையின் முக்கியமான பாயிண்டாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த படக்குழு: இந்தப் படத்தின் மாமதுர பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் பாடல் ஆறே ஷாட்களில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே டேக்கில் அனைத்து ஷாட்களும் ஓகே ஆனதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் இன்றைய தினம் திருப்பதியில் படத்தின் வெற்றியை வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











