twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்“..கார்த்திக் சுப்பாராஜ் ட்வீட்!

    |

    சென்னை : பேரறிவாளன் விடுதலை குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ட்விட்டரில் தனது மகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

    பீட்சா படத்தின் மூலம் இயக்குநரக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கினார்.

    ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் விக்ரமனை வைத்து மகான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஓர் வித்தியானமான சிந்தனை கொண்டனர். அவர் இயக்கிய பல படங்களில் அவற்றை நாம் பார்க்க முடிவும், மகான் திரைப்படத்திலும், காந்தியின் கொள்கைகளைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் கார்த்திக் சுப்புராஜ். உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்புக்கு கார்த்திக் வரறேப்பு தெரிவித்துள்ளார்.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

    அம்மாவுக்கு கிடைத்த வெற்றி

    அம்மாவுக்கு கிடைத்த வெற்றி

    செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன்,நல்லவர்கள் வாழ வேண்டும், கெட்டவர்கள் வீழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நீதி. இதைதான் வள்ளுவரும் கூறுகிறார். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர், என் மீது அன்பு செலுத்தினர்.என் அம்மா. அவரின் போராட்டம், தியாகம் ஆகியவையே இதற்கு காரணம். நிறைய புறக்கணிப்பு, வலி, வேதனை, அவமானங்களை அவர் சந்தித்தார். அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி தான் இது என்று பேசி இருந்தார்.

    பல ஆண்டுகள் காத்திருந்தேன்

    பல ஆண்டுகள் காத்திருந்தேன்

    இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் விடுதலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், பேரறிவாளன் விடுதலையால் அற்புதம்மாள் முகத்தில் அந்த சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Karthik subbaraj tweet : பேரறிவாளன் விடுதலையால் அற்புதம்மாள் முகத்தில் அந்த சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன். கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டர் பதிவு
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X