என்ன இப்படி இருக்காரு... சிம்ஹாவா இது... லுக் மிரட்டுதே!

சென்னை : நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் லீட் கதாபாத்திரங்களில் நடித்து ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள படம் மகான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்ஹாவின் லுக்கை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மகான் படம்

மகான் படம்

நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள படம் மகான். இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த முந்தைய படமான ஜகமே தந்திரமும் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் தந்தை, மகனுக்கிடைலான உறவு குறித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நிஜத்தில் அப்பா -மகனாக இருக்கும் இவர்கள் இருவரும் சினிமாவில் இணைந்து நடித்துள்ள நிலையில் அவர்களது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவர்களுக்கு தற்போது படம் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்ஹாவின் லுக்

சிம்ஹாவின் லுக்

படம் வெளியாக இன்னும் ஏறக்குறைய இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தற்போது படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். படத்தில் சிம்ஹாவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். எப்போதுமே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமையும்.

சத்தியவான் கேரக்டரில் சிம்ஹா

சத்தியவான் கேரக்டரில் சிம்ஹா

இந்நிலையில் அவரது லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். இவர் படத்தில் சத்தியவான் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். மேலும் சிம்ஹாவின் லுக்கும் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

வித்தியாசமான கெட்டப்

வித்தியாசமான கெட்டப்

இந்த போஸ்டரில் பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னாள் சேரில் கம்பீரமாக அமர்ந்துள்ளார் சிம்ஹா. வித்தியாசமான கெட்டப்பில் வித்தியாசமான போஸில் அவர் அமர்ந்துள்ளார். கண்களுக்கு கண்ணாடி. வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என்று அதகளப்படுத்துகிறார்.

புதிய கெட்டப்

புதிய கெட்டப்

படத்தில் இதுவரை விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரது கெட்டப்புக்கள் மட்டுமே வெளியாகின. இந்நிலையில் சிம்ஹாவின் புதிய கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இவர் வில்லனா அல்லது கேரக்டர் ரோலா என்பது குறித்து அறிய படம் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X