Don't Miss!
- News
கவனம் மக்களே! சென்னையில் அடுத்த 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Finance
'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மதுரையில் துவங்கும் ஜிகிர்தண்டா 2 பட சூட்டிங்.. சரியான இடம் தான்!
சென்னை :தமிழில் பாபி சிம்ஹா சித்தார்த் லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். கேங்ஸ்டர் படமாக இந்த படம் வெளியாகி இருந்தது.
தமிழில் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
குச்சுப்புடி
நடனத்தில்
கலக்கி
வரும்
நடிகை
லட்சுமிமேனன்
!

ஜிகிர்தண்டா படம்
நடிகர்கள் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமிமேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான ஜிகர்தண்டா படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படம் அவரது இயக்கத்தில் வெளியான மற்றும் ஒரு சிறப்பான படம் என்ற அந்தஸ்தை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் நடிப்பு ரசிகர்களின் விருப்பத்திற்கும் பாராட்டுக்களுக்கும் உள்ளானது.

3 மொழிகளில் ரீமேக்
தமிழில் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அக்ஷய் குமார் கீர்த்தி சனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த படம் வெளியானது. ஆயினும் ஹிந்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படம் இந்தி ஆடியன்சை கவர தவறிவிட்டது.

ஜிகிர்தண்டா 2 படத்தின் பூஜை
இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக உள்ளது. இந்தப் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தின் பூஜை மதுரையில் போடப்பட உள்ளது. மதுரை ஜிகிர்தண்டாவிற்கு பேமஸ் என்ற நிலையில் அங்கு இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது மிகவும் பொருத்தமானதே.

ராகவா லாரன்ஸ் ஹீரோ
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் நடித்த நிஷா சஜயன் ஆகியோர் நடிக்க உள்ளனர். 70 மற்றும் 80களின் காலகட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக உள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட சூட்டிங்
மேலும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் கொடைக்கானலில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நடிகர்களாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது

மிரட்டும் கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தடுத்த கதைகளங்களில் மிரட்டி வருகிறார். சமீபத்தில் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்து மகான் படத்தை அவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாரம்பரியமாக நாம் கடைப்பிடித்து வரும் சில விஷயங்களை அவர் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.

எதிர்பார்ப்பில் ஜிகிர்தண்டா 2
படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை சிறப்பாக்கி இருந்தனர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்