Kasthoori Raja :கோயிலில் திரண்ட குடும்பத்தினர்.. தனுஷ் வராததற்கு என்ன காரணம்!

சென்னை :தனுஷின் தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜாவின் திருமண நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கோயிலில் செல்வராகவன் குடும்பத்தினர் மற்றும் கஸ்தூரி ராஜா -விஜயலட்சுமி தம்பதியினர் திரண்டு சாமி தரிசனமும் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நாள் மிகவும் சிறப்பானது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கீதாஞ்சலி செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Director kasthoori raja and family celebrates his Anniversary in Temple

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் திருமண நாள் கொண்டாட்டம் :நடிகர் தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா, இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல தளங்களில் தன்னை நிரூபித்தவர். தொடர்ந்து தன்னுடைய மகன் தனுஷை வைத்து, படம் இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனும் தன்னை சிறப்பான இயக்குநராக ரசிகர்களிடம் நிரூபித்தார்.

இருவரும் தங்களின் கேரியரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தங்களின் தந்தைக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளனர். தனுஷ் கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என தன்னை நிரூபித்துள்ளார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் இயக்கத்துடன், நடிப்பையும் கையில் எடுத்துள்ளார். பீஸ்ட், சாணிக்காயிதம் என இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக சாணிக்காயிதம் படத்தில் இவரது கேரக்டர் சிறந்த விமர்சனங்களை பெற்றது.

இயக்குநர் செல்வராகவன் தற்போது கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது இவர்கள், தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள நிலையில் தொடர்ந்து தங்களின் குடும்ப நிகழ்வுகளை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Director kasthoori raja and family celebrates his Anniversary in Temple

இந்நிலையில் நேற்றைய தினம் கஸ்தூரி ராஜா மற்றும் அவரது மனைவி விஜயலட்மியின் திருமண நாளையொட்டி அவர்களும் செல்வராகவன் பேமிலியும் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதையொட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் மிகவும் கலர்புல்லாக காணப்படும் நிலையில், ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வின்போது தனுஷ் மிஸ்ஸிங். இதுகுறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே கேப்டன் மில்லர் படத்திற்காக தற்போது தனுஷ் மதுரையில் உள்ளதால், இந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர் சூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் தன்னுடைய பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை நேரடியாக பகிர்ந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X