மகன்களை தொடர்ந்து நடிகரான அப்பா... யாருன்னு பாருங்க... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: தனது மகன்களை தொடர்ந்து பிரபல இயக்குநரும் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா.

தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே, சோலையம்மா, தாய் மனசு, நாட்டுப்புற பாட்டு, வாசுகி, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, என் ஆசை ராசாவே, வீரம் விளைஞ்ச மண்ணு, கும்மி பாட்டு, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

துள்ளுவதோ இளமை படம்

துள்ளுவதோ இளமை படம்

கஸ்தூரி ராஜா தனது இரண்டு மகன்களையும் துள்ளுவதோ இளமை படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். துள்ளுவதோ இளமை படத்தில் இளைய மகன் தனுஷ் லீடிங் ரோலில் நடிக்க, மூத்த மகன் செல்வராகவன் அப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார்.

நடிகராக கலக்கும் தனுஷ்

நடிகராக கலக்கும் தனுஷ்

அதன் பிறகு இருவருமே அவரவர் வழியில் சென்று இன்று தங்களின் தொழிலில் வெற்றி பெற்றவர்களாக வலம் வருகின்றனர். நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி, டோலிவுட் பாலிவுட் என்றும் கலக்கி வருகிறார். அதோடு நிற்காமல் ஹாலிவுட் வரை தடம் பதிவிட்டார் தனுஷ்.

செல்வராகவனும் படங்களில்

செல்வராகவனும் படங்களில்

சிறந்த நடிகராக வலம் வரும் தனுஷ் தேசிய விருதுகளையும் குவித்துள்ளார். இதேபோல் இயக்குநராக கேரியரை தொடங்கிய செல்வராகவனும் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ஏற்கனவே தனுஷ் நடிகராக வலம் வரும் நிலையில் செல்வராகவனும் படங்களில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தில் வில்லன்

பீஸ்ட் படத்தில் வில்லன்

சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் நடிகராக அறிமுகமாகிறார்.

சமரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மோகன் குருசெல்வா இயக்கும் சமரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாகிறார் கஸ்தூரி ராஜா.
இந்தப் படத்தில் ரித்விகா மதி என்ற கதாப்பாத்திரத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆரி அர்ஜுனன் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X