செப்டம்பர் 2ம் தேதி மதுரையில் பட்டதாரி சாந்தினியை மணக்கும் இயக்குனர் கதிர்
சென்னை: இயக்குனர் கதிர் தஞ்சையைச் சேர்ந்த சாந்தினி தேவியை வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்.
இதயம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நெல்லையைச் சேர்ந்த இயக்குனர் கதிர். அவர் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
காதலை கொண்டாடும் படங்களை தந்துள்ளவர் கதிர்.

காதல் தேசம்
காதல் தேசம் படத்தில் வரும் முஸ்தபா முஸ்தபா பாடல் இன்றும் கல்லூரி மாணவர்களால் பாடப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

ஸ்ரீதேவி, ரிச்சர்ட்
கதிரின் காதல் வைரஸ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்கள் ஸ்ரீதேவி விஜயகுமாரும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தினி தேவி
தஞ்சையைச் சேர்ந்த ஆனால் சென்னையில் வசிக்கும் விஜயகுமார், தனலக்ஷ்மி தம்பதியின் மகள் சாந்தினி தேவிக்கும், இயக்குனர் கதிருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சாந்தினி தேவி பிசிஏ படித்துள்ளார்.

2ம் தேதி திருமணம்
கதிர், சாந்தினியின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து செப்டம்பர் 4ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











