திருப்பரங்குன்றத்தில் இயக்குநர் கதிர் திருமணம்.. பாரதிராஜா, பாலா வாழ்த்து

By Sudha

மதுரை: பிரபல இயக்குநர் கதிர் திருமணம் இன்று மதுரையில் கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தினி தேவிக்கு அவர் திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமணத்தில் தாலி கட்டினார்.

திருமணத்திற்கு பெரும் திரளான திரையுலகினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இதில் அடக்கம்.

இதயம் கதிர்

இதயம் கதிர்

இதயம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கதிர். முதல் படத்திலேயே இசைஞானியும், இவரும், நடிகர் முரளியும் இணைந்து கலக்கியிருந்தனர். இவரது பூர்வீகம் நெல்லை ஆகும்.

காதல் படங்களின் நாயகன்

காதல் படங்களின் நாயகன்

தொடர்ந்து காதல் ரசம் பொழியும் படங்களாக கொடுத்தவர் கதிர். காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகியவை இவரது படங்களில் முக்கியமானவை. உழவன் படமும் பேசப்பட்டது.

தஞ்சைப் பெண் சாந்தினி

தஞ்சைப் பெண் சாந்தினி

கதிருக்கும், தஞ்சாவூரைப் பூர்வீமாகக் கொண்ட சாந்தினி தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாந்தினி தேவி தனது பெற்றோருடன் சென்னையில் தற்போது வசித்து வருகிறார்.

திருப்பரங்குன்றத்தில்

திருப்பரங்குன்றத்தில்

இன்று இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்றது.

திரையுலகினர் வாழ்த்து

திரையுலகினர் வாழ்த்து

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா உள்ளிட்ட திரையுலகினர் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

4ம் தேதி சென்னையில் வரவேற்பு

4ம் தேதி சென்னையில் வரவேற்பு

கதிர் - சாந்தினியின் திருமண வரவேற்பு, செப்டம்பர் 4ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X