தயாரிப்பாளருக்கே தெரியாமல் ஓடிடி ரிலீஸ்.... சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ருத்ரன்.
இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

ருத்ரன் படம்
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கிவரும் படம் ருத்ரன். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2வது முறையாக கூட்டணி
மேலும் இந்தப் படத்தில் காஞ்சனா படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் மீண்டும் இணைந்துள்ளனர். இது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. காஞ்சனா படத்தில் திருநங்கையாக மிரட்டலான நடிப்பை சரத்குமார் வெளியிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு தயார்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் ஆகியவை நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாக உள்ளதாக கடந்த ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் இசை
படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் சிறப்பான இசையை கொடுத்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இதை தயாரிப்புத் தரப்பும் உறுதி செய்திருந்தது.

ஓடிடி ரிலீஸ் என தகவல்
இந்நிலையில் தற்போது படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த தகவலை பகிர்ந்துள்ள இயக்குநரும் தயாரிப்பாளருமான கதிரேசன், குறும்புடன் தனக்கே இந்த தகவல் தெரியாது என்று நகைச்சுவையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்
வரும் ஏப்ரலில் ருத்ரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் பரவி வருவதையொட்டியே கதிரேசன் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











