காதலை வெளிப்படுத்த அச்சம் எதற்கு.. கிருத்திகா உதயநிதியின் வேற லெவல் விளக்கம்!
சென்னை : நடிகர், தயாரிப்பாளர், தமிழக அமைச்சர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருபவர் உதயநிதி.
அவரது மனைவியும் பிரபல இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
படங்களை இயக்குவதில் கவனம் செலுத்திவரும் கிருத்திகா உதயநிதி, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

நடிகர் உதயநிதி
நடிகர் உதயநிதி தயாரிப்பாளராக கோலிவுட்டில் தன்னுடைய பயணத்தை துவங்கி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின்மூலம் நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள உதயநிதி, தற்போது தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி
இவரது காதல் மனைவியான கிருத்திகா உதயநிதி மிர்ச்சி சிவா -ப்ரியா ஆனந்த் நடிப்பில் வணக்கம் சென்னை என்ற வெற்றிப் படத்தை இயக்கி தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்ததாக விஜய் ஆன்டனி நடிப்பில் காளி என்ற படத்தை இயக்கி சிறந்த இயக்குநர் இமேஜை தக்க வைத்துக் கொண்டார்.

பேப்பர் ராக்கெட் வெப் தொடர்
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் வெப் தொடரில் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் அடுத்தடுத்த சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
உதயநிதி மற்றும் கிருத்திகா இருவரும் கடந்த 2002ல் காதல் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் ஆர்வம் அதிகமாக கொண்ட கிருத்திகா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது காதல் குறித்து ட்விட்டரில் கிருத்திகா வெளியிட்டுள்ள பதிவு அதிகமான அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காதலிப்பதற்கு அச்சம் எதற்கு?
காதலிப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் எதற்கு அச்சம் என்றும் இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்துக் கொள்ள காதலே சிறந்த வழி என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தன்னுடைய படங்களில் காமெடி உள்ளிட்ட விஷயங்களை கையாண்டாலும், காதலுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் கிருத்திகா. இந்நிலையில் தற்போது காதல் குறித்த அவரது பதிவு அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











