பகவத்கீதையுடன் ஒப்பிட்டு.. நயன்தாரா குறித்து இழிவாக பதிவிட்ட மேதகு பட இயக்குநர்.. வெடித்த சர்ச்சை!

சென்னை: நடிகை நயன்தாரா குறித்து மேதகு பட இயக்குநர் கிட்டு இழிவாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள படம்'மேதகு'.

இந்த திரைப்படம் கடந்த 25ஆம் தேதி BS Value என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

மேதகு பட இயக்குநர்

மேதகு பட இயக்குநர்

இயக்குநர் கிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கதை, திரைக்கதை, வசனம் அமைத்து 'மேதகு' படத்தை இயக்கியிருந்தார்.

பிரபலங்கள் ஆதரவு

பிரபலங்கள் ஆதரவு

ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டிவிட்டினர். வரலாற்றை தவறாக பதிவு செய்தவர்களுக்கான பாடம் மேதகு படம் என கருத்துக்கள் எழுந்தன.

நயன்தாரா குறித்து விமர்சனம்

நயன்தாரா குறித்து விமர்சனம்

படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் கிட்டுவின் சமூக வலைதள சர்ச்சை பதிவுகள் சில விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. அந்த வகையில் நயன்தாரா குறித்தும் கிட்டு மோசமாக விமர்சித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பெரியார் குறித்து சர்ச்சை

பெரியார் குறித்து சர்ச்சை

சாதி ஆதரவு கருத்து தெரிவித்ததாக கிட்டு சர்ச்சையில் சிக்கினார். பெரியார் குறித்து இழிவாக கிட்டு பதிவிட்டிருந்ததும் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்காக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா காதல்

நயன்தாரா காதல்

இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்தும் இழிவான ஒரு கருத்தை பதிவிட்டு வாங்கிக்கட்டி வருகிறார். நயன்தார விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்தார். இந்த விஷயம் ஊரறிந்தது.

கீதை வாசகத்துடன்

கீதை வாசகத்துடன்

நயன்தாராவும் அதனை மறைத்ததில்லை. அந்தப் புகைப்படங்களை பகவத்கீதையின் வாசகத்துடன் இணைத்து கிட்டுபதிவிட்டிருந்தார். அதாவது எது இன்று உன்னுடையதோ.. அது நாளை மற்றொருவருடையதாகிறது.. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும் என பதிவிட்டுள்ளார்.

கணக்கு பிளாக்

கணக்கு பிளாக்

அவரது இந்த பதிவு தற்போது சர்ச்சையாகியுள்ளது. பெண்கள் குறித்த மேதகு படம் எடுத்தவரின் பார்வை இப்படித்தான் உள்ளது என பலரும் அந்தப் ஷேர் செய்ய உடனடியாக தனது சமூகவலைதள கணக்கை பிளாக் செய்துள்ளார் கிட்டு.

சினிமா நட்சத்திரங்கள் பலர்

சினிமா நட்சத்திரங்கள் பலர்

சாமானியர்களே ஒரு காதல் தோல்விக்கு பிறகு அதிலிருந்து மீண்டு மற்றொரு காதலில் விழுவது சாதாரணமாகி விட்டது. சினிமாக்காரர்கள் பலரும் இதுபோல் காதல் தோல்விக்கு பிறகு வேறு காதலில் விழுந்துள்ளார்கள். திருமணம், குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

கொதிக்கும் ரசிகர்கள்

கொதிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் நயன்தாராவின் காதலை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவரை இழிவுப்படுத்தும் வகையிலும் இயக்குநர் கிட்டு இப்படி ஒரு பதிவை ஷேர் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நயன்தாராவின் ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X