twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குமரிமுத்துவின் அண்ணன் டைரக்டர் கே.எம்.பாலகிருஷ்ணன் மரணம்: உடல் தகனம் செய்யப்பட்டது

    By Siva
    |

    நடிகர் குமரிமுத்துவின் அண்ணன் இயக்குனர் கே.எம். பாலகிருஷ்ணன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

    பிரபல காமெடி நடிகர் குமரிமுத்துவின் அண்ணன் இயக்குனர் கே.எம். பாலகிருஷ்ணன். அவர் ரஜினிகாந்த் நடித்த ஆறு புஷ்பங்கள், விஜயகாந்த் நடித்த பார்வையின் மறுபக்கம், சுரேஷ்,விஜயசாந்தி நடித்த மாதுளை முத்துக்கள் உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவர் நேற்று மாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

    அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் அவருடைய உடல் இன்று நண்பகல் 12 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. மறைந்த கோபாலகிருஷ்ணனின் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அவருக்கு சுசீலா என்ற மனைவியும், முருகன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இதில் ராதாகிருஷ்ணன் கண்ணும் கண்ணும், சிவப்பதிகாரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: tamil cinema மரணம்
    English summary
    Comedian Kumarimuthu's elder brother director KM Balakrishnan died of heart attack yesterday. His body will be cremated at Besant Nagar crematorium at 12 pm today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X