80களில் டாப்பில் இருந்தவர்.. பிரபல இயக்குநர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்!
திருவனந்தபுரம்: சினிமா மற்றும் நாடக இயக்குனரும் நடிகருமான கே.பி. பிள்ளை காலமானார். அவருக்கு வயது 91.
மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. இவர் முதலில் ராணுவத்தில் பணிபுரிந்தார்.
கேபி பிள்ளை இந்திய விமானப்படையில் 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்

மலையாள நாடக இயக்குநர்
அந்த நேரத்தில் அவர் தியேட்டரில் இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றினார். அலகாபாத், தாம்பரம், கான்பூர் மற்றும் அம்பாலாவில் மலையாள நாடக இயக்குநராகவும் பணியாற்றினார். அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்னர் 1970-ம் ஆண்டு சினிமா துறையில் நுழைந்தார்.

இணை இயக்குநராக தொடக்கம்
1970ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ராமு காரியத்தின் அபயம் என்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுவின் பிரியா, மயிலாடும்குன்னு, பணி தீராத வீடு, முதல் கதை மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினார்.

எராளமான ஹிட் படங்கள்
தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு வெளியான நாகரம் சாகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அவர் அஷ்டமுடி கயல், பிருந்தாவனம், பிரியசகி ராதா, கதிர் மண்டபம் மற்றும் பத்திரசூர்யன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
1981-ம் ஆண்டில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

உடல் நலக்குறைவால் மரணம்
பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய கேபி பிள்ளை வெற்றி இயக்குநராகவும் வலம் வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்துவந்த அவர், நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications