படப்பிடிப்புக்கு முன் கொரோனா டெஸ்ட்... பிரபல இயக்குனருக்கு தொற்று உறுதி.. ஷூட்டிங் தள்ளி வைப்பு!
ஐதராபாத்: பிரபல இயக்குனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழில் சிம்பு, பரத் நடித்த வானம் படத்தை இயக்கியவர், கிரீஷ். பிரபல தெலுங்கு இயக்குனர்.
தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ள அவர், இந்தியிலும் படங்கள் இயக்கி இருக்கிறார்.

ரகுல் பிரீத் சிங்
நடிகை கங்கனா ரனாவத் நடித்த, ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா என்ற இந்தி படத்தையும் இயக்கியுள்ளார். இப்போது வருண் தேஜ், ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்தது.

தொற்று உறுதி
இதையடுத்து, அவர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்காக படக்குழுவினர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி பரிசோதனை செய்தனர். அப்போது படக்குழுவினர் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால், இயக்குனர் கிரீஷுக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டது.

வீட்டில் தனிமை
இதனால், இயக்குனர் கிரீஷ் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் கிரீஷ் இயக்க இருந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவன் கல்யாண், அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய வகை வைரஸ்
உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சினிமா பிரபலங்கள்
இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அமிதாப்பச்சன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தமன்னா, ராஜமவுலி, விஷால், பிருத்விராஜ், ஜெனிலியா, நிக்கி கல்ராணி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ராம் சரண் தேஜா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











