STR-க்கு சிஸ்டராக நடிக்க எந்த நடிகையும் சம்மதிக்கவில்லை... உண்மையை சொன்ன பிரபலம்!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவது வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை கமலா திரையரங்கில் பத்து தல படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

சிம்பு, கெளதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த பிரஸ் மீட்டில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன.

சிம்புவின் பத்து தல

சிம்புவின் பத்து தல

மாநாடு படத்துக்குப் பின்னர் கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்து கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்திலும் மிரட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது பத்து தல படத்தின் மிகப் பெரிய பாசிட்டிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

STR-க்கு நோ சிஸ்டர்

STR-க்கு நோ சிஸ்டர்

பத்து தல படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை கமலா திரையரங்கில் பத்து தல படக்குழுவினரின் ப்ரஸ் மீட் நடந்தது. இதில், சிம்பு, கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது இயக்குநர் கிருஷ்ணா STR-க்கு சிஸ்டராக நடிக்க எந்த நடிகையும் ஓக்கே சொல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

சிம்புவின் முகத்தில் வெட்கம்

சிம்புவின் முகத்தில் வெட்கம்

அதாவது, 'STR மாதிரி ஒரு மாஸ் ஹீரோ வைத்து படம் இயக்குவதில் ரொம்பவே சேலஞ்ச் இருக்கு. இதில் அவர் ஏஜிஆர் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். முக்கியமாக STR-க்கு தங்கையாக நடிக்க ஒரு நடிகைக் கூட தயாராக இல்லை. தென்னிந்தியாவில் சிம்புவின் சகோதரியாக நடிக்க அனு சித்தாரா மட்டுமே ஓக்கே சொன்னார்" எனக் கூறினார். இதனைக் கேட்ட சிம்பு வெட்கத்தில் க்யூட்டாக சிரித்தார்.

ஏஆர் ரஹ்மான் மியூசிக்கல் ட்ரீட்

ஏஆர் ரஹ்மான் மியூசிக்கல் ட்ரீட்

தொடர்ந்து பேசிய இயக்குநர் கிருஷ்ணா கவுதம் கார்த்திக்கை ரொம்பவே கொடுமைப்படுத்திட்டேன். இதில் புது கவுதம் கார்த்திக்கைப் பார்ப்பீர்கள். கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பான வில்லனாக நடித்துள்ளார் எனவும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், ஏஆர் ரஹ்மானின் இசை புதிய அனுபவத்தைத் தரும். அவரது BGM இன்னொரு மைல் ஸ்டோனாக இருக்கும் என்றார். ராவடி பாடல் நன்றாக வர காரணம் சாயிஷா தான் எனக் கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X