எல்லாம் முடிந்தது.. பத்து தல இயக்குநரின் ட்வீட்.. வெளியானது புதிய அப்டேட்

சென்னை: சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பத்து தல படம் குறித்து இயக்குநர் ஓபலி கிருஷ்ணா ட்வீட் செய்திருக்கிறார்.

சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்பு மாநாடு படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று நூறு கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தொடர்ச்சியாக ஹிட் கொடுக்கும் சிம்பு

தொடர்ச்சியாக ஹிட் கொடுக்கும் சிம்பு

மாநாடு படம் பெற்ற வெற்றி சிம்புவை உற்சாகத்தின் உச்சத்துக்கு அழைத்து சென்றது. அதன் பலனாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினார் சிம்பு. அதன்படி கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். தொடர்ந்து இரண்டு படங்களும் ஹிட்டானதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சிம்புவும், அவரது ரசிகர்களும்.

பத்து தல படத்தில் கமிட்டான சிம்பு

பத்து தல படத்தில் கமிட்டான சிம்பு

சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட முஃப்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. சிம்புவுடன் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

வரவேற்பைப் பெற்ற பத்து தல டீசர்

வரவேற்பைப் பெற்ற பத்து தல டீசர்

படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. டீசர் வெளியீட்டு நிகழ்வில் கௌதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாங்காக்கில் இருப்பதால் சிம்புவால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. படத்தில் கேங்ஸ்டராக சிம்பு நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் கொண்டாடிவருகின்றனர். பத்து தல படத்தின் டீசர் இதுவரை யூட்யூபில் 10 மில்லியன் பார்வையார்களை கடந்திருக்கிறது.

 பத்து தல குறித்து இயக்குநரின் புதிய ட்வீட்

பத்து தல குறித்து இயக்குநரின் புதிய ட்வீட்

இந்நிலையில் பத்து தல படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குநர் ஒபலி கிருஷ்ணா வெளியிட்டிருக்கிறார். அதன்படி படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. இறுதி நாள் ஷூட்டிங்கின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கிருஷ்ணா பகிருந்து, பத்து தல படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக முடிந்திருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். பத்து தல படமானது வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் ஹிட்டாகும்பட்சத்தில் சிம்பு தொடர்ச்சியாக மூன்று படங்களை ஹிட் கொடுத்தார் என்ற சிறப்பை பெறுவார் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X