சிம்புவை இதில் இழுக்காதீர்கள் ப்ளீஸ்.. பத்து தல இயக்குநர் கோரிக்கை

சென்னை: பத்து தல படத்தின் இயக்குநர் கிருஷ்ணா நடிகர் சிம்பு குறித்தும் பத்து தல படத்தின் ப்ரோமோ குறித்தும் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்டிருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக தனது பயணத்தை தொடர்கிறார். நடிப்பு, இயக்கம், நடனம், பாடல்கள் பாடுவது, பாடல்கள் எழுதுவது என சிம்பு என்கிற எஸ்டிஆர் பல விஷயங்களில் தான் தனித்துவமானவர் என்பதை நிரூபித்தவர்.

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல

சிம்பு தற்போது ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துவருகிறார். அவருடன் கௌதம் கார்த்திக், இயக்குநர் கௌதம் வாசுதேவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க்கிறார். கன்னடத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முஃப்தி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

நிறைவடைந்த பத்து தல படப்பிடிப்பு

நிறைவடைந்த பத்து தல படப்பிடிப்பு

பத்து தல படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொட்டி ஜெயா, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு பிறகு அவர் கேங்ஸ்டராக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான நம்ம சத்தம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான நம்ம சத்தம்

படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நம்ம சத்தம் என்று தொடங்கும் அந்தப் பாடலில் சிம்பு கருப்பு சட்டை, கருப்பு வேட்டியுடன் தோன்றியிருந்தார். பாடலின் ட்யூனும், ரஹ்மானும் குரலும் பலரையும் வசீகரிக்க அந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பத்து தல ப்ரோமோ

பத்து தல ப்ரோமோ

இதனையடுத்து பத்து தல படத்துக்கான ப்ரோமோ ஒன்றை படக்குழு தயாரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ஏ.ஆர் ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, சிம்பு உள்ளிட்டோரும் நடித்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் சமீபத்தில் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் கபிலன் ஆகிய மூன்று பேரும் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து ப்ரோமோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது என தகவல்கள் பரவின.

பத்து தல ப்ரோமோவில் சிம்பு இல்லை

பத்து தல ப்ரோமோவில் சிம்பு இல்லை

இந்நிலையில் பத்து தல ப்ரோமோ குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், " எங்களின் திட்டப்படி சிலம்பரசனை பத்து தல ப்ரோமோ வீடியோவில் கொண்டுவரவில்லை. அவருடைய பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். பத்து தல படத்தின் ப்ரோமோஷன் குறித்து படத்தின் தயாரிப்பாளிடம் தெளிவான யோசனை இருக்கிறது. நாங்கள் வெறுப்பு பேச்சுக்களை வெறுக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X