Krithika udayanidhi: அடுத்த தலைமுறை கல்யாணம் வரைக்கும் போகுமா?.. கிருத்திகா உதயநிதி சந்தேகம்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ளது காதலிக்க நேரமில்லை. முன்னதாக வடசென்னை, காளி ஆகிய படங்கள், பேப்பர் ராக்கெட் வெப் தொடர் மூலமும் கவனம் பெற்ற கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படம் ரொமாண்டிக் ஜானரில் ஜெயம் ரவி, நித்யா மேனன் லீட் கேரக்டரில் நடிக்க உருவாகியுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ள நிலையில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

காதலிக்க நேரமில்லை படம்: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகிபாபு, லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் தன்னுடைய சூட்டிங்கை நிறைவு செய்துள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் துவங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
காதலிக்க நேரமில்லை முதல் பாடல்: ஏஆர் ரஹ்மான், தீ ஆகியோர் குரலில் என்னை இழுக்குதடி என்ற இந்த பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் ஹிட்டாகி உள்ளது.இந்தப்பாடலில் ஏஆர் ரஹ்மான், தீ ஆகியோரும் இணைந்து ஆட்டம்போட்டுள்ள நிலையில், ஜெயம் ரவி, நித்யா மேனனும் இணைந்துள்ளனர். இந்த ஆண்டின் மிகப்பெரிய வைப் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. ரொமாண்டிக் ஜானரில் ஜெயம் ரவி, நித்யாமேனன் இணைந்துள்ள இந்தப் படத்தில் மேலும் வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இதழுக்கு படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
காதல் குறித்து கிருத்திகா உதயநிதி: மேலும் காதல் குறித்தும் அவர் அடுத்தடுத்த விஷயங்களை பேசியுள்ளார். தனது அப்பா -அம்மா தலைமுறையில் இருந்த காதல், தங்களுக்கு வந்த காதல், அடுத்ததாக தன்னுடைய மகன் தலைமுறையின் காதல் என அனைத்துமே மாறிக் கொண்டே இருப்பதாக அவர் கூறியுள்ளார். அது ஏன் என யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இனிவரும் அடுத்த தலைமுறை கல்யாணம் வரைக்குமாவது போவார்களா என்று சந்தேகமாக உள்ளதாகவும் கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார். முன்னதாக வணக்கம், சென்னை, காளி படங்களுடன் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இவர் இயக்கியுள்ள நிலையில், காதலிக்க நேரமில்லை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவி -கிருத்திகா உதயநிதி காம்போ: நடிகர் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்த படங்கள் வொர்க் ஆகவில்லை. சைரன், பிரதர் என வித்தியாசமான ஜானர்களில் அவர் நடித்து படங்கள் வெளியான நிலையில் அந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு எப்போதுமே கைக்கொடுக்கும் ரொமாண்டிக் ஜானரில் காதலிக்க நேரமில்லை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிப்பு ராட்சசியாக பார்க்கப்படும் நித்யா மேனனும் கைகோர்த்துள்ள நிலையில், படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











