இது ஒரு கனவா இருக்கக்கூடாதா? எஸ்பிபிக்காக கண்கலங்கிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்!
சென்னை: எஸ்பிபியின் மரணம் ஒரு கனவாக இருக்க கூடாதா என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர். அறிமுக நடிகர்கள் முதல் உச்ச நடிகர்கள் வரை பலரையும் இயக்கியுள்ளார்.
பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார், மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கண்கள் கலங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓபனிங் பாடல்
ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கேஎஸ் ரவிக்குமார் எஸ்பிபி குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கேஎஸ் ரவிக்குமாரின் பெரும்பாலான படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். குறிப்பாக அவர் ரஜினியை வைத்து இயக்கிய படங்களில் எல்லாம் ஓபனிங் பாடல் எஸ்பிபிதான் பாடியுள்ளார்.

ரஜினி கமலுக்கு குரலாய்
அவரது இயக்கத்தில் வெளியான படையப்பா, முத்து உட்பட பல படங்களில் ரஜினிக்கு அறிமுக பாடலை பாடியிருக்கிறார் எஸ்பிபி. இதேபோல் கமலை வைத்து இயக்கிய பல படங்களிலும் எஸ்பிபி அவருக்கு குரலாய் ஒலித்திருக்கிறார். இந்நிலையில் எஸ்பிபி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சிறந்த மனிதர்
அதில் எஸ்பிபி சாரின் மறைவு இசை உலகத்துக்கு பேரிழப்பு. பேச்சுக்கு இப்படி சொல்லலாம், ஆனால் உண்மையாவே சொல்றதுக்கு வார்த்தை இல்லை. நமக்கு நெருங்கிய, அல்லது நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துட்டா என்ன ஒரு உணர்வு இருக்குமோ அப்படித் தான் இருக்கு. அவர் சிறந்த மேதை அப்படிங்றதால மட்டுமில்ல. அவர் ஒரு சிறந்த மனிதராகவும் இருந்தார்.
Recommended Video

கனவா இருக்க கூடாதா?
அதனாலதான் அந்த மாதிரி உணர்வு ஏற்பட்டிருக்கு. 'தெனாலி' படத்தின் போது ஏ.ஆர்.ரஹ்மானும் இசைக்கூடத்தில் இருந்தோம். அப்போது அவர் கண்ணாடி.. என்று ஆரம்பிரத்த கேஎஸ் ரவிக்குமார், கண்ணாடி என்றதும் இப்போ அவர் கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குறது நியாபகம் வந்துடுச்சு. இது ஒரு கனவா இருக்கக்கூடாதா? என்று கண்கலங்கினார்.


Click it and Unblock the Notifications