KS Ravikumar: ரஜினி.. கமல்.. விஜய்.. சூர்யா.. நன்றி சொன்ன கேஎஸ் ரவிக்குமார்.. எதற்காக தெரியுமா?
சென்னை: இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகியுள்ளது ஹிட் லிஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து இந்தப் படத்தின் வீடியோவை பார்த்து ரஜினி, கமல், சூர்யா, விஜய் ஆகியோர் பாராட்டியது குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் நன்றியையும் கூறியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்: இயக்குனராக இருந்து நடிகராகவும் மாறியுள்ளவர் கேஎஸ் ரவிக்குமார். நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அதிரடி சரவெடியாக பல வெற்றி படங்களை இயக்கியுள்ள கே எஸ் ரவிக்குமார், ஒரு கட்டத்தில் இயக்கத்தை நிறுத்திவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். பல கேரக்டர் ரோல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நடித்து வருகிறார். ஆர்கே செல்லுலாய்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களை தொடர்ந்து கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஹிட் லிஸ்ட் படம்.
ஹிட் லிஸ்ட் படம்: பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்தப் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் கேஎஸ் ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சரத்குமார் 150 வயது வரை தான் நடிப்பேன் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த வீடியோ ஒன்றை தற்போது கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் நன்றி: அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இந்த படத்தின் வீடியோவை பார்த்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதை வீடியோவில் பதிவு செய்துள்ள கேஎஸ் ரவிக்குமார், அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். படத்தை சூரியக்கதிர் காக்காளர் மற்றும் கே கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பு: கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா ஆகிய படங்கள் வெளியாகி உள்ள சூழலில் அவரது மூன்றாவது படைப்பாக ஹிட் லிஸ்ட் படம் உருவாகி உள்ளது. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட இயக்குநராக பல வெற்றிப்படங்களை இயக்கி கோலிவுட்டில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் கவனம் பெற்றவர் கேஎஸ் ரவிக்குமார். அவர் நடிகராகவும் தன்னுடைய இயல்பான நடிப்பை அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











