வசந்த் பின்னிட்டாரு... பாரதிராஜா பிரமிப்ப ஏற்படுத்தியிருக்காரு... பிரபல இயக்குநர் பாராட்டு
சென்னை : நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Recommended Video
படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ராக்கி படம்
நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராக்கி. நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இநத்ப் படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ராக்கி.

மிகுந்த எதிர்பார்ப்பு
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பிரமோஷன்களும் சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டன. வசந்த் ரவியின் முந்தைய படமான தரமணி கொடுத்த வரவேற்பும் வசந்த் ரவிக்கு இருந்த நிலையில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

வேற லெவல் வெறித்தனம்
இந்நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அடிதடி களமாக படம் அமைந்துள்ள நிலையிலும் அதில் ஒரு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்துள்ள ரசிகர்கள் அனைவரும் வேற லெவல் வெறித்தனமாக படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புல்லரிக்க வைக்கும் க்ளைமாக்ஸ்
மேலும் படத்தில் வசந்த், பாரதிராஜாவின் நடிப்பையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி புல்லரிக்க வைத்ததாகவும் கூறியுள்ளனர். தியேட்டர் எக்ஸ்பீரியன்சுடன் படத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் பாராட்டு
இந்நிலையில் படத்தை பார்த்துள்ள பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ராக் போன்ற வலுவான கதையம்சம் கொண்ட படம் ராக்கி என்று பாராட்டியுள்ளார். பைட், சென்டிமெண்ட் உள்ளிட்டவை இருந்தாலும் வித்தியாசமான ஜானரில் படம் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த், பாரதிராஜா குறித்து பாராட்டு
இயக்குநர் ராமின் தரமணியில் நடித்ததை போலவே வசந்த் ரவி ராக்கியிலும் பின்னியுள்ளதாகவும் பாரதிராஜா வித்தியாசமான ஆன்டி ரோலில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவரது நடிப்பை சொல்லவே தேவையில்லை என்றும் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











