KS Ravikumar Mother Passed Away: தாயாரை இழந்த கே.எஸ். ரவிக்குமார்.. திரையுலகம் அஞ்சலி.. விபரம் இதோ!

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி சுமார் 30 ஆண்டுகளாக இயக்குநராக கொடிகட்டி பறந்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். இவரது இயக்கத்தில் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாயுள்ளது. பல நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடித்த பின்னர், முன்னணி நடிகர்களாக மாறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதை விட, படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தாலும், இவரது படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகவும் முக்கியமானது.

KS Ravikumar KS Ravikumar Mother Death RIP

திரையுலகில் தவறுதலாக நுழைந்து தனது திரைவாழ்க்கையைத் தொடங்கிய, கே.எஸ் ரவிக்குமார், திரையுலகின் உச்சத்தைத் தொட்ட இயக்குநர்களில் ஒருவர். இப்படியான புகழுக்குச் சொந்தக் காரரான இவர், நேற்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி இரவில், தனது தாயாரை இழந்துள்ளார். 88 வயதான, ருக்மணி அம்மாள் நேற்று இரவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் மறைவு குறித்த செய்தி திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. அதேநேரத்தில், பலரும் கே. எஸ். ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் 2.30 மணி அளவில் ருக்மணி அம்மாளின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது அவரது உடல், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த மன வேதனையில் உள்ள கே.எஸ் ரவிக்குமாருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

KS Ravikumar KS Ravikumar Mother Death RIP

More from Filmibeat

Read more about: ks ravikumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X