Poonga nagaram: கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்ட பூங்கா நகரம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. சும்மா மிரட்டுதே

சென்னை: டைரக்டர் ஏ வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈகே முருகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் பூங்கா நகரம்.

திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படம் சஸ்பென்ஸ் கலந்த ஹாரர் த்ரில்லிங் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூங்கா நகரம் படத்தை நடராஜ் தயாரித்துள்ளார். படத்தில் தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Director KS Ravikumar released the first look poster of Poonga nagaram movie

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்ட பூங்கா நகரம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இயக்குநர் ஏ வெங்கடேஷ், நடிகராகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருபவர். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த ஈகே முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம். திருவண்ணாமலையை மையமாக கொண்டு சஸ்பென்ஸ், காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் நாயகனாக தமன்குமார், ஹீரோயினாக ஸ்வேதா டோரத்தி மற்றும் பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்டுள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் படத்தின் மிரட்டலான இரண்டாவது லுக்கும் உடனடியாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வித்தியாசமான வகையில் இந்தப் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ஒளிப்பதிவை பாண்டியன் குப்பன் மேற்கொண்டுள்ளார். சிஎம் இளங்கோவன் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பை ஹமரா சிவி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேஎஸ் ரவிக்குமார் வெளியிட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எப்போதுமே ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்படும். அந்த வகையில் பூங்கா நகரம் என்ற அழகான தலைப்புடன் ரசிகர்களை சந்திக்கவுள்ள இந்தப் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள தமன்குமார், எஸ்ஏசி இயக்கத்தில் ரீமேக்காக வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

சன் டிவியின் வானத்தை போல தொடர் மூலமாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாகவும் இவர் மாறியுள்ளார். ஒரே நேரத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை என பயணித்துவரும் தமன்குமார், தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னதாக கண்மணி பாப்பா என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்துள்ள தமன்குமார், தற்போது மீண்டும் அதே ஜானரில் பூங்கா நகரம் மூலம் களமிறங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X