Kamal Haasan: உலகநாயகன்னு கூப்பிடக் கூடாதா? கமல் ஹாசனுக்கே அன்பு கட்டளை போட்ட கே.எஸ். ரவிக்குமார்!

சென்னை: தமிழ் சினிமாவில் பாராட்டுகளையும் வெற்றிகளையும் குவித்த வசனகர்த்தாகளில் கிரேஸி மோகனுக்கு என்றும் தனி இடம் உண்டு. இவர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் வெற்றிகளைக் குவித்தது மட்டும் இல்லாமல், வசனங்களுக்காக தனி வரவேற்பைப் பெற்றது. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மறைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு இழப்பு. அதேபோல் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஒரு கை போனது போல் ஆகிவிட்டது எனக் கூறலாம். இன்று அதாவது மே 1ஆம் தேதி சென்னையில் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், ஜெய்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் கிரேஸி மோகன் குறித்து பேசியது மிகவும் வேகமாக மாறி வருகிறது.

கே.எஸ். ரவிக்குமார் பேசும்போது, " கிரேஸி மோகன் சார் என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது ஆரம்ப காலங்களில் அவர் சந்தித்த அவமானங்களையும், அவரை பலர் உதாசினப்படுத்தியதையும் கூறியுள்ளார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் சொல்லுவார்கள், அதன்படி தனது தம்பியை வைத்து அவரது கெரியரை தொடங்கியதாக கூறியுள்ளார்.

Director KS Ravikumar Talks About Crazy Mohan And Kamal Haasan

இரவில் வேலை: ஒரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் நான்கு படத்திற்கு வசனம் எழுதிக் கொடுப்பார். சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு பல நாட்கள் காத்திருப்பார். இரவில்தான் வசனங்கள் எழுதுவார். இப்போது இரவில் பணி செய்பவர்கள் என்றால் ஏ.ஆர். ரகுமான் போன்றோரைச் சொல்கிறார்கள். ஆனால், கிரேஸி மோகன் சார் அப்போதே இரவில்தான் வசனங்கள் எழுதுவார். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம். நாங்கள் படம் பண்ணும்போது தினமும் சந்தித்துக் கொள்வோம். படங்கள் பண்ணாத காலகட்டத்தில் எல்லா மே 30ஆம் தேதியும் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து விடுவார். அன்றைய தினத்தில் அவரது மனைவிக்கும் பிறந்த நாள், எனக்கும் பிறந்த நாள் அப்போது எனக்கு போன் செய்து வாழ்த்துவார்.

எமோஷனல்: ஒருமுறை நான் பாலியில் இருந்தபோது எனக்கு போன் செய்தார் பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பின்னர் நான் ஹைதராபாத் வரவேண்டியிருந்தது. நான் விமான நிலையத்தில் இறங்கிய பின்னர் பார்க்கிறேன், அவரது போனில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. நான் அவருக்கு தொடர்பு கொண்டேன், ஆனால் ரீச் ஆகவில்லை. அதன் பின்னர் நானும் மறந்துவிட்டேன், ஒரு 10 நாட்களுக்குப் பின்னர் அவரது எண்ணில் இருந்து அவரது மறைவுச் செய்தி வந்தது. இந்த தகவல் எனக்கு வந்ததும், அடுத்த 10 நிமிடத்தில் கமல் சார் எனக்கு போன் செய்தார். ஒரு மணி நேரம் கிரேஸி மோகன் சார் குறித்து பேசினார். எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியதுதான். அவர் நமக்கு முன்னே சென்று விட்டார்.

Director KS Ravikumar Talks About Crazy Mohan And Kamal Haasan

ஏ.ஐ: கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் பார்த்தேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் வர மற்றொரு காரணம், கமல் சாரையும் ஜெய்ராமையும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவும் தான். கமல் சார் ஒரு துறையில் இருந்தால் பரவாயில்லை. ஒரு புறம் அரசியல், ஒரு புறம் சினிமா, இப்போது புதிதாக ஏ.ஐ. வேறு. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அவர் என்ன கலக்கப் போகிறார் என காத்துக் கொண்டு உள்ளோம்.

தல அஜித்: அஜித் ஒருமுறை என்னை யாரும் இனிமேல் தல என்று கூப்பிட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அவரது நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் முழுவதும் அவரைத் தல என்றுதான் கூப்பிடுகிறார்கள். அவரும் அந்த படத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதை மாற்றவே, முடியாது. அதேபோலத்தான் நீங்களும் உலக நாயகன்னு கூப்பிட வேண்டாம் எனக் கூறுகிறீர்கள். நீங்கள் யார் சார் அப்படிச் சொல்வதற்கு? நாங்கள் உங்களை உலக நாயகன்னு கூப்பிடுவோம். இந்த அன்பு ஒரு தலைக் காதல் மாதிரி, நீங்க காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை.

உலக நாயகன்: நீங்க என்ன சார் பத்ம ஸ்ரீ-னு உங்க பெயருக்கு முன்னால் போட்டு இருக்கீங்க. பத்ம பூஷன், பத்ம விபூஷன் நெறையா பேரு வாங்கீட்டாங்க. தனியா நிக்கனும்னா ஒரு பெயர் வேண்டும் அல்லவா? உலக நாயகன்னுதான் நாங்க கூப்பிடுவோம். உலக நாயகன் கமல் சார்னுதான் கூப்பிடுவோம். அவருக்கு வேண்டாம் என்றால் அவர் சொல்லிக் கொண்டு போகட்டும். நம்மை நிறுத்த முடியாது. இதைவிட இன்னும் சூப்பரான விஷயம் என்னவென்றால், கமல் சாரை விண்வெளி நாயகன்னு மணி சார் சொல்லியிருக்காரு. அதன் பின்னர் வேறு பட்டமே இல்லை" எனப் பேசினார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

படங்கள்: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு எல்லாம் வசனம் எழுதியவர் என்றால் அது கிரேஸி மோகன் தான். இவர்கள் கூட்டணியில், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், கமல் ஹாசனின் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர் என்றால் கிரேஸி மோகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Director KS Ravikumar Talks About Crazy Mohan And Kamal Haasan

கமல்ஹாசன்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் கிரேஸி மோகன் குறித்து பேசும்போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினார். அதாவது அவர் பேசும்போது, " சில விஷயங்களைக் காப்பி அடிக்க கூடாது. மோகன் அது போல தான். அவர் மோகன் மாதிரி எதுவும் செய்ய முடியாது. வேண்டுமானால் எனக்கும் ஆசையாக உள்ளது எனக் கூறலாம். அதன் பின்னர் வரும் ரிசல்ட்டை நீங்கள் தான் எதிர் கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யம்: நானும் கிரேஸி மோகனும் தினமும் பேசிக்கொள்வோம். எந்த ஊரில் இருந்தாலும் நாங்கள் பேசிக் கொள்வோம். நான் யாரிடம் பேசுகிறேன் என எனது குடும்பத்திற்கும் தெரியும், அவர் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என அவரது குடும்பத்திற்கும் தெரியும்" என்பது உள்ளிட்ட பல விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X