twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டாமை முதல் தசாவதாரம் வரை.. கேஎஸ் ரவிக்குமாரின் சிறந்த படங்கள் குறித்த ஓர் பார்வை!

    |

    சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது இயக்கத்தில் உருவான சில படங்கள் குறித்து காணலாம்..

    தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த மற்றும் தரமான இயக்குநர்களில் ஒருவர் கேஎஸ் ரவிக்குமார். இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் படத்தில் கோ டைரக்டராக பணிபுரிந்தார்.

    அதனை தொடர்ந்து புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தான் இயக்கும் படங்களில் சென்ட்டிமென்ட்டாக சில காட்சிகளில் தானும் நடித்து வருகிறார்.

    7 நாள் குவாரன்டைன் ஓவர், அடுத்து வீடு..இதோட முடிஞ்சுதுன்னு நினைச்சிடாதீங்க! பிரபல ஹீரோ எச்சரிக்கை!7 நாள் குவாரன்டைன் ஓவர், அடுத்து வீடு..இதோட முடிஞ்சுதுன்னு நினைச்சிடாதீங்க! பிரபல ஹீரோ எச்சரிக்கை!

    கேஎஸ் ரவிக்குமார் பிறந்தநாள்

    கேஎஸ் ரவிக்குமார் பிறந்தநாள்

    தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களான ரஜினி மற்றும் கமலை இயக்கி ஹிட் படங்களை மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். அவரின் பிறந்தநாளான இன்று அவரது சிறந்த படங்களில் சிலவற்றை காணலாம். சேரன் பாண்டியன் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயகுமார் சரத்குமாரை வைத்து இயக்கியப்படம் நாட்டாமை.

    நாட்டாமை

    நாட்டாமை

    நாட்டாமை படம் கிராமத்து கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார், குஷ்பு, மீனா, விஜயகுமார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரத்குமார் டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பார். 1994ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூலை குவித்தது. அதோடு தமிழக அரசின் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படம் பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டடது.

    நட்புக்காக..

    நட்புக்காக..

    மீண்டும் கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாரை வைத்து இயக்கியப் படம் நட்புக்காக. 1998 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இரண்டு நண்பர்களுக்கு இடையிலான நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தப் படத்திலும் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா மகன் ன்ற கேரக்டர்களில் நடித்திருந்தார் சரத்குமார். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், சுஜாதா, சித்தாரா, மன்சூர் அலிகான், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    முத்து படம்

    முத்து படம்

    அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முத்து படத்தை இயக்கினார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். அவர்கள் மட்டுமின்றி ரகுவரன், ராதாரவி, சரத்பாபு, காந்திமதி, செந்தில், வடிவேலு என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

    படையப்பா

    படையப்பா

    அடுத்து படையப்பா படத்தின் மூலம் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்தார் கேஎஸ் ரவிக்குமார். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், லட்சுமி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, நாசர், பிரித்தா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வசூலை குவித்து சாதனை படைத்த இந்தப் படம் தமிழக அரசின் விருதையும் பெற்றது.

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    அவ்வை ஷண்முகி மற்றும் தெனாலி ஆகிய படங்களுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமார் கமலுடன் இணைந்த படம் பஞ்ச தந்திரம். இந்தப் படத்தின் மூலம் கமலும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் மூன்றாவது முறையாக இணைந்தனர். நகைச்சுவை மற்றும் காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது இப்படம். இதில் கமல்ஹாசன் பைலட்டாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இதில் நாகேஷ், ஜெயராம், ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஊர்வசி, தேவையானி, சங்கவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூலை அள்ளியது.

    தசாவதாரம்

    தசாவதாரம்

    மீண்டும் கேஎஸ் ரவிக்குமாரும் கமலும் இணைந்து நடித்த படம் தசாவதாரம். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் 10 கதாப்பாத்திரங்களில் நடித்து மிரளவிட்டார். 2008ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமலின் கடின உழைப்பு வெளிப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் தான் நடிகர் கமலுக்கு உலக நாயகன் என்ற பட்டத்தை கொடுத்தார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. கமலின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

    கமெண்ட் பண்ணுங்க

    கமெண்ட் பண்ணுங்க

    இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், குடும்பச்சித்திரம், காமெடி, காதல், ஆக்ஷன், த்ரில்லர் என அனைத்து வகையான படங்களையும் கொடுத்துள்ளார். இதுவரை 43 படங்களை இயக்கியிருக்கும் கேஎஸ் ரவிக்குமார், அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப படங்களை தருவதில் வல்லவர். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களை கமெண்டுகளில் தெரிவிக்கலாம்.

    English summary
    Director KS Ravikumar celebrates his 62nd birthday today. In this occassion lets see his top movies..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X