twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இயக்குநர் கேஎஸ் சேது மாதவன் திடீர் மரணம்.. நடிகர் சிவகுமார் நேரில் அஞ்சலி!

    |

    சென்னை: பிரபல இயக்குநரான கேஎஸ் சேது மாதவன் மறைவுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களில் ஒருவர் கேஎஸ் சேது மாதவன். 1960களில் மலையாள மொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

    புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்... மறைந்த இயக்குநர் சேதுமாதவனுக்கு கமல் அஞ்சலி புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்... மறைந்த இயக்குநர் சேதுமாதவனுக்கு கமல் அஞ்சலி

    மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார் கேஎஸ் சேதுமாதவன்.

    10 தேசிய விருதுகள்

    10 தேசிய விருதுகள்

    10 தேசிய விருதுகளை குவித்துள்ள கேஎஸ் சேது மாதவன், கேரள அரசின் 9 விருதுகளையும் பெற்றுள்ளார். கேஎஸ் சேது மாதவன் மலையாள சினிமாவுக்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு கேரள அரசின் உயரிய விருதான ஜே சி டேனியல் விருது வழங்கப்பட்டது.

    சிவகுமாரின் மறுபக்கம்

    சிவகுமாரின் மறுபக்கம்

    கேஎஸ் சேது மாதவன் தான் 1962ஆம் ஆண்டு கண்ணும் கரலும் என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். நடிகர் சிவகுமார் ராதா நடிப்பில் வெளியான மறுபக்கம் படத்தை இயக்கினார். மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த படம், 1991ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

    இன்று காலை மறைவு

    இன்று காலை மறைவு

    90 வயதான கேஎஸ் சேது மாதவன் சென்னையில் மனைவி வல்சலா மகன்கள் சந்தோஷ், சோனுகுமார் மற்றும் மகள் உமா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் கேஎஸ் சேது மாதவன், இன்று காலமனார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சிவகுமார் நேரில் அஞ்சலி

    சிவகுமார் நேரில் அஞ்சலி

    சில பிரபலங்கள் நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார் மறைந்த இயக்குநர் சேதுமாதவன் உடலுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    திரையுலகிற்கு பேரிழப்பு

    திரையுலகிற்கு பேரிழப்பு

    தொடர்ந்து அவர் கூறிய இரங்கல் செய்தியில், அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் "மறுபக்கம்" என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் "உச்சிவெயில்" அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்.

      English summary
      Director KS Sethu Madhavan passes away at the age of 90 due to age related issues. Actor Sivakumar paid tribute in person. Sivakumar acted in Marupakkam movie with KS Sethu Madhavan directorial.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X