டிக் டிக் டிக் கனெக்ஷன்.. பூமி படத்துல ஜெயம் ரவிக்கு இப்படியொரு ரோலா? இயக்குநர் சொன்ன சீக்ரெட்!
சென்னை: ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு என்ன ரோல் என்ற ரகசியத்தை இயக்குநர் லக்ஷ்மண் கசியவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
அந்த படத்தைத் தொடர்ந்து, கோலிவுட்டில் ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது.

ஹாட்ரிக்
ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய இயக்குநர் லக்ஷ்மன் தொடர்ந்து, அவருடன் இணைந்து போகன் படத்தையும் இயக்கினார். இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து பூமி படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறது. இந்த காம்போவில் நடிகை ஹன்சிகா மட்டும் தற்போது மிஸ்ஸிங்.

என்ன ரோல்
லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள பூமி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் லக்ஷமண், பூமி படத்தில் ஜெயம் ரவி என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை ஓப்பன் செய்துள்ளார்.

டிக் டிக் டிக் கனெக்ஷன்
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில், விண்வெளிக்கு செல்லும் வீரராக ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்நிலையில், பூமி படத்தில், மார்ஸ் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி நடித்துள்ளார் என்ற டாப் சீக்ரெட்டை இயக்குநர் போட்டுடைத்துள்ளார்.

விவசாயம் எப்படி?
மார்ஸ் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஜெயம் ரவி, சொந்த ஊரான தஞ்சைக்கு வரும் போது, விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, மார்ஸை அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் நம்ம பூமியை காப்பாற்றுவோம் என களமாடுவது தான் பூமி படத்தின் கதை என்பதும், இயக்குநர் லக்ஷ்மண் கொடுத்த அப்டேட் மூலம் தெரியவந்துள்ளது.

எப்போ ரிலீஸ்?
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், உருவாகி வரும் பூமி படத்தின் ரிலீஸ் வரும் மே 1ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய படங்கள் தள்ளிப் போனால், மே 1ம் தேதி ஜெயம் ரவியின் பூமி ரிலீசாவதில் சிக்கல் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications











