பாலா எல்லாம் பெரிய இயக்குநரா?.. பெண்களை மோசமா நடத்துறாரு.. இயக்குநர் லெனின் பாரதி விளாசல்!
சென்னை: பார்வையற்ற பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் அந்த பெண்களுக்கு கொடுமை செய்யும் கயவர்களை கொடூரமாக ஹீரோ அருண் விஜய் கொல்வது போலவும் பாலா வணங்கான் படத்தை எடுத்த நிலையில், பெண்களை அடித்துக் கொடுமைப்படுத்தும் காட்சிகளை தான் பாலா இயக்குகிறார் என்றும் பெண்களை காப்பாற்ற ஆண்கள் தான் வரவேண்டும் என்பது போலவே படமெடுத்துக் கொண்டிருக்கிறார் என லெனின் பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, நாச்சியார், தார தப்பட்ட, வர்மா, வணங்கான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில், அதிகப்படியான படங்களில் ஆண்கள் தான் கதையின் நாயகர்களாக உள்ளனர்.

மேலும், ஆக்ரோஷமாக வில்லன்களை கிளைமேக்ஸில் நரபலி கொடுப்பது போல கொடூரமாக கொல்லும் காட்சிகளை வைத்தே ஓட்டி வருகிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த ஆண்டு வெளியான வணங்கான் படத்திற்கும் அதே போன்ற விமர்சனங்கள் குவிந்த நிலையில், வசூல் ரீதியாக அந்த படம் ஓடவே இல்லை.
அவுட்டேட்டட் ஆன பெரிய இயக்குநர்கள்: தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்களாக கருதப்பட்டு வரும் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், பாலா, ஹரி உள்ளிட்ட பலர் சமீப காலமாக அவுட்டேட்டட் இயக்குநர்களாகவே மாறி வருகின்றனர். ஒரே பேட்டர்னில் இன்னமும் படங்களை இயக்கி ரசிகர்களை கவர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வணங்கான் திரைப்படமும் பாலாவுக்கு கை கொடுக்கவில்லை.
விலகிய சூர்யா: வர்மா படத்தால் பாலாவுக்கு பெரிய மன வேதனை ஏற்பட்ட நிலையில், வர்மாவுக்கு பதில் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து அந்த படத்தை துருவ் விக்ரம் முதலில் வெளியிட்டு அறிமுகமானார். அதன் பின்னர், பாலாவுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் வணங்கான் படத்தை தயாரிக்க ஆரம்பித்து நடித்தும் வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் பாலாவுடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், விலகிவிட்டார். அதன் பின்னர், அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கினார் பாலா.
லெனின் பாரதி குற்றச்சாட்டு: இயக்குநர் பாலா என்ன பெரிய இயக்குநர் தனது படங்களில் பெண்களை தலைமுடியை பிடித்து அடிப்பது, கொடுமைப்படுத்துவது என்றே காட்சிகளை வைக்கிறார். மேலும், ஆண் தான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்கிற ஆணாதிக்க புத்தியுடன் தான் படங்களை இயக்கி வருகிறார் என்றும் மிஷ்கினை வைத்து இயக்கிய போக்ஸோ காட்சியில் கூட ஆண்களை சேஃப் கார்டு செய்யும் காட்சியாகவே வைத்திருக்கிறார் என லெனின் பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
நாச்சியார்: கடந்த 2018ம் ஆண்டு ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்தை பாலா தான் இயக்கினார். அவரை பற்றி இப்படி தப்புத் தப்பாக லெனின் பாரதி எப்படி பேசலாம் என பாலா ரசிகர்கள் பதிலடி கொடுத்து திட்டி வருகின்றனர். சினிமாவில் ஒரு இயக்குநரின் படைப்பை இன்னொரு இயக்குநர் இப்படி கடுமையாக சாடலாமா? கமர்ஷியல் படங்கள் என ஹீரோயின்களை காட்சிப் பொருளாக எடுக்கும் இயக்குநர்கள் குறித்து மேற்குத் தொடச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி ஏன் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் பாலா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











