சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை.. மிஷ்கினை கண்டித்த பிரபல இயக்குநர்.. சபாஷ் சொன்ன விஜய் பட இயக்குநர்!

சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகில் அதிகம் விவாதிக்கப்படும் பெயர்களில் ஒன்று மிஷ்கின். பாட்டில் ராதா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், மிஷ்கின் பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. தான் பேசவந்த விசயத்தோடு, மேடை நாகரீகம் இல்லாமல், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி, மிஷ்கினின் செயல்பாடு குறித்து மிகவும் காட்டமாக கண்டித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம், பாட்டில் ராதா. வரும் ஜனவரி, 24ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு, ஷேன் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், இயக்குநர்கள் வெற்றி மாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

lenin bharathi misskin bottle radha

இதில் இயக்குநர் மிஷ்கின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. காரணம், அவர் பேசும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் பேசப் பேச, அங்கு இருந்த திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் என பலரும் கைதட்டிச் சிரித்து, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆபாச பேச்சு: இது தொடர்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், இதேபோல், கூல் சுரேஷ், ரோபோ சங்கர் அல்லது வேறு எதாவது சின்ன படத்தினைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பேசியிருந்தால் அமைதியாக இருப்பார்களா? கோடம் பாக்கத்தின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திதான் பிக் பாஸ் எனவும் விமர்சித்தார். மேலும், நாகரீக விமர்சனம் பற்றி பாடமெடுக்கும் தனஞ்செயன், திருப்பூர் சுப்ரமணியம் போன்றோர், மிஷ்கினின் ஆபாச பேச்சுகள் குறித்து வாய் திறக்காமல் எந்த பொந்தில் அமுங்கி உள்ளனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

லெனின் பாரதி: இப்படியான நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், மிஷ்கினின் நடவடிக்கையை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்… என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது.. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே..” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜய்: லெனின் பாரதியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். லெனின் பாரதியின் இந்தக் கருத்துக்கு, இயக்குநர் ஜான் மகேந்திரன் சபாஷ் லெனின் என கமெண்ட் செய்துள்ளார். இவர் நடிகர் விஜய்யை வைத்து சச்சின் என்ற படத்தினை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X