இயக்குனர் லிங்குசாமி இயக்கும் படத்தின் ஹீரோ இவர்தான்!
சென்னை : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என்ற பெயர் எடுத்த இயக்குனர் லிங்குசாமி இயக்குனராக மட்டுமல்லாமல் பல தரமான திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் உள்ளார்.
சண்டைக்கோழி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் கடந்த 2019-ல் வெளியாகி பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்றது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

சண்டைக்கோழி
முதல் படத்திலேயே மெகா ஸ்டார்களை வைத்து இயக்கிய இயக்குனர் லிங்குசாமி அதில் வெற்றியும் பெற்று இருந்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு ஆனந்தம் படத்தை இயக்கிய இவர் அதில் மம்முட்டி, முரளி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆனந்தம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. ஆனந்தம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை என கலக்கி வந்த இவர் கடைசியாக சண்டக்கோழி பாகம் 2 இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

தெலுங்கில் ரீமேக்
சண்டைக்கோழி 2 க்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருக்க முன்னணி நடிகரின் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி இப்பொழுது முதன்முறையாக தெலுங்கு திரைப்படத் துறையில் தனது கால் தளத்தை பதிக்க உள்ளார். அருண் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரெட் என்ற பெயரில் வெளியானது அதில் நடிகர் ராம் பொத்தனி ஹீரோவாக நடித்திருந்தார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி
தெலுங்கில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் ராம் , ஸ்மார்ட் சங்கர் மற்றும் ரெட் ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

பாக்கா ஆக்ஷன்
வரும் ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவில் கலக்கிய லிங்குசாமி தெலுங்கிலும் தனது வெற்றியை கொடுப்பார் என நம்பப்படும் நிலையில் இந்த படம் ஒரு பாக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது.


Click it and Unblock the Notifications











