நானா ஓட்டுப்போடல? விரலை காட்டி கொதித்த பிரபல இயக்குநர்.. வைரலாகும் டிவீட்!

சென்னை: தான் ஓட்டுப்போடவில்லை என்று செய்திகள் பரவிய நிலையில் கோபமாக டிவிட்டியுள்ளார் பிரபல இயக்குநர்.

தமிழக சட்டசபைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தனர்.

அஜித் மாஸ்க்

அஜித் மாஸ்க்

சில பிரபலங்கள் சாதாரணமாக செய்தது கூட பெரும் பேசு பொருள் ஆனது. குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது, நடிகர் அஜித் அணிந்திருந்த மாஸ்க் நிறம், நடிகர் விக்ரம் நடந்து வந்து வாக்களித்தது என சாதாரணமாக நடந்த நிகழ்வுகள் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டன.

வாக்களிக்கவில்லை..

வாக்களிக்கவில்லை..

இருப்பினும் தனுஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்காத பிரபலங்கள் என சில சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும் அடிப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் லிங்குசாமியும் வாக்களிக்கவில்லை என பேச்சு எழுந்தது.

போட்டோவை போட்டு..

போட்டோவை போட்டு..

இதனை அறிந்த லிங்குசாமி, தான் வாக்களித்த பிறகு கை விரலில் மை வைக்கப்பட்டதை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி. அதாவது, ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன்.

எதிர்பார்க்கிறேன்..

எதிர்பார்க்கிறேன்..

சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X