நண்பர்களை இழக்கவில்லை.. கண்கலங்கிய டைரக்டர் லிங்குசாமி.. தி வாரியர் பட விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை : இயக்குநர் லிங்குசாமியின் பல படங்கள் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் தொடர்ந்து இருந்து வருபவை.
Recommended Video
அவரது சமீபத்திய படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது தி வாரியர் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்
தமிழ், தெலுங்கில் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் ராம் பொத்தனேனி, கிரித்தி ஷெட்டி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி சிறப்பான பல படங்களை தமிழில் கொடுத்தவர். முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர். இவரது சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை மிகச்சிறப்பாக கவர்ந்த படங்கள். இந்நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் இவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.

தி வாரியர் படம்
இதையடுத்து கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் தற்போது ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் தி வாரியர் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள் இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழு சிறப்பாக செய்து வருகிறது.

வரவேற்பை பெற்ற புல்லட் பாடல்
முன்னதாக இந்தப் படத்தின் புல்லட் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பையும் ஏராளமான லைக்ஸ்களையும் ரசிகர்களிடையே பெற்றுள்ளது. ராம் பொத்தனேனி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மேலும் நடிகர் ஆதி இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

பிரம்மாண்ட ரிலீஸ்
ஆந்திராவில் 450 திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் 300 திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்தியிலும் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.

கண்கலங்கிய லிங்குசாமி
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களும் கலந்துக் கொண்டு படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் மேடையில் பேசிய லிங்குசாமி, திடீரென கண்கலங்கினார். இதையடுத்து படத்தின் ஹீரோ ராம் பொத்தனேனி அவருக்கு தண்ணீர் கொடுத்து தேற்றினார்.

தான் வாய்ப்பு கேட்டவர்கள்
தான் மனிதர்களை அதிகமாக சம்பாதித்துள்ளதாகவும் எதை இழந்தாலும் தான் இவர்களை இழக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விழாவிற்கு மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் வந்துள்ளது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த அவர்,ஒரு காலகட்டத்தில் இவர்களிடம் வாய்ப்பு கேட்டு அவர்கள் அலுவலக வாசலில் நின்றதை நினைவு கூர்ந்த அவர் தற்போது அவர்கள் தனக்காக பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நண்பர்களை இழக்கவில்லை
தனக்கு வீடு, அலுவலகம், கார் உள்ளிட்டவை இல்லாமல் போனாலும் இத்தகைய மனிதர்கள், நண்பர்கள் தனக்கு பின்புலமாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இவர்களை தக்கவைத்துக் கொள்வதை தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு தான் செயல்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











