கொரோனா நிவாரண நிதி… இயக்குனர் லிங்குசாமி ரூ.10 லட்சம் வழங்கினார் !

சென்னை : கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இயக்குனர் லிங்குசாமி ரூ 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த காசோலையை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினிடம் லிங்குசாமி வழங்கி உள்ளார்.

இதை, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு என் அன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு

கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி நேரத்தில் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆறுதல் கடந்த சில நாட்களாக நோய் தொற்று சற்று குறைந்துள்ளது

பேருதவி

பேருதவி

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் , தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இது கொரோனாவால் போராடும் நோயாளியின் சிகிச்சைக்கு பேருதவியாக உள்ளது.

ரூ10 லட்சம்

ரூ10 லட்சம்

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இந்த காசோலையை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினிடம் லிங்குசாமி வழங்கினார். இதை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரமம்

ஆசிரமம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் லிங்குசாமி, மணப்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி இருந்தார். அந்த ஆசிரமத்தை உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன், கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்தார். தற்போது ரூ 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதனால் பலரும் லிங்குசாமியை பாராட்டி வருகின்றனர்

More from Filmibeat

Read more about: lingusamy donates cm relief fund
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X