இயக்குனர் லிங்குசாமியின் முதல் தெலுங்குப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை: பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் லிங்குசாமி

கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார்

இப்போது முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 சொந்த குடும்ப வாழ்க்கையை

சொந்த குடும்ப வாழ்க்கையை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள லிங்குசாமி முதல் படத்திலேயே தனது சொந்த குடும்ப வாழ்க்கையை திரைப்படமாக ஆனந்தம் என்ற படத்தின் மூலம் எடுத்து அதில் வெற்றி கண்டார். தமிழ் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்த ஆனந்தம் வெற்றியை தொடர்ந்து மாதவன் ஹீரோவாக நடித்த ரன் என்ற சூப்பர் ஹிட் ஆக்ஷன் படத்தை கொடுத்தார். சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

அதைத்தொடர்ந்து ஜி, சண்டைக்கோழி,பீமா,பையா, வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2 என தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு இதில் அஞ்சான் திரைப்படம் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. சூர்யாவின் நடிப்பில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் இந்த படம் ஓவர் பில்டப் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் லிங்குசாமி அடுத்தடுத்து படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டார் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2 படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் ரூட்டை மாற்றி இப்பொழுது தெலுங்கு சினிமாவில் அறிமுகம் கொடுக்கிறார்

 தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை லிங்குசாமி இயக்கிய தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. உப்பண்ணா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நாசர், நதியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் ஆதி இதில் வில்லனாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் . கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 17ஆம் தேதி மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அறிவித்ததன்படி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ராம் பொத்தினேனியின் 19வது படமாக உருவாகி வந்த இப்படத்திற்கு "தி வாரியர்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் முரட்டு மீசையுடன் போலீஸ் உடையில் கம்பீரமான தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் "தி வாரியர்" லிங்குசாமிக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X