ஓங்கி இறக்கினா ஒன்றரை டன் டியூனுடா: லிங்குசாமியை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: அஞ்சான் படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசிய இரண்டு வசனங்களை வைத்து அவரை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்கள் நக்கல் அடிக்கிறார்கள்.
சூர்யாவை வைத்து தான் இயக்கிய அஞ்சான் படம் குறித்து லிங்குசாமி பிரபல தொலைக்காட்சிக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் நான் அப்படியே டியூன் ஆயிருக்கேன், மேலும் நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கேன் என்றார்.
இதை வைத்து லிங்குசாமியை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்கள் கிண்டல் செய்கிறார்கள்.

டியூன்
லிங்குசாமி சொன்ன டியூன் வசனம் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

வித்தை ஜோக்
கவுண்டமணி, செந்தில் வரும் வாழைப்பழ ஜோக்கை லிங்குசாமிக்கு ஏற்றவாறு மாற்றி நக்கல் அடித்துள்ளனர்.

லிங்கு பாய்
பெயர் - லிங்கு பாய், பொழுதுபோக்கு- கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவது. என்ன நானே அப்படி ட்யூன் பண்ணிக்கிட்டேன்.

அஞ்சான் கார்
இது தான் சார் நான் டிசைன் செய்த அஞ்சான் கார். நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த கார்ல இறக்கியிருக்கேன் சார்.

என்னைய டா ஓட்டுறீங்க?
என்னையா டா ஓட்டுறீங்க, இருங்க டியூன் பண்ணிட்டு வந்து மொத்த வித்தையையும் போழ போழ போழந்துறேன்.

யார் சாமி?
யார் சாமி இவன்... எங்க இருந்து வந்திருக்கான். யாரும் இப்படி மொத்த வித்தையையும் இறக்கி பார்த்தது இல்ல. ஃபேஸ்புக்ல எல்லாரும் டியூனிங்ல இருக்கானுங்க.

டியூன் டா
ஓங்கி இறக்கினா ஒன்றரை டன் டியூன்டா...!


Click it and Unblock the Notifications











