Lingusamy: பையா 2 படத்தை துவங்கப்போகும் லிங்குசாமி.. ஹீரோ யாரு தெரியுமா?
சென்னை: நடிகர் கார்த்தி -தமன்னா நடிப்பில் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டான பையா படத்தின் 2வது பாகம் உருவாகவுள்ளதாக நீணட காலங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
பையா படம் கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தின் 2வது பாகத்தில் நடிகர் கார்த்தியே நடிக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்தக் கதையில் கார்த்தி நடிக்கவில்லை என்றும் புதிய ஹீரோ ஒருவர் கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பையா படம்: நடிகர் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்த படம் பையா. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியின் துள்ளலான மற்றும் துடிப்பான நடிப்பு படத்திற்கு சிறப்பான வடிவத்தை கொடுத்தது. கார்த்தி கேரியரில் சிறப்பாக அமைந்த இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கார்த்தி -தமன்னா ஜோடி சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியது.
கார்த்தி கேரியர் பெஸ்ட் படம்: இந்தப் படத்தில் நடித்ததன்மூலம் கார்த்தி மற்றும் தமன்னா இடையில் காதல் உண்டானதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை பொய்யாக்கும் வகையில் வீட்டில் பார்த்த பெண்ணை மணமுடித்தார் கார்த்தி. தற்போது தமன்னாவும் பாலிவுட்டில் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழிலும் விஜய் வர்மா என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி: இந்நிலையில் பையா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் லிங்குசாமி விரைவில் இயக்கவுள்ளதாக பல மாதங்களாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தியே நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் சிம்பு, ஆர்யாவை வைத்து லிங்குசாமி படமியக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பையா 2 படத்தில் லிங்குசாமியுடன் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் ஆகாஷ் முரளி: இவர் தற்போது விஷ்ணு வர்தனுடன் இணைந்து படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் தருணத்தில் உள்ளதாகவும் அடுத்ததாக ஆகாஷ் முரளி, லிங்குசாமி இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் முந்தைய படத்தின் தாக்கத்தில் உருவாகுமா அல்லது முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விறுவிறுப்பான பையா படம்: பையா படத்தில் தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக ஹீரோ கார்த்தி களமிறங்குவதாகவும் சென்னை டூ மும்பை பயணத்தை அவர்கள் காரிலேயே மேற்கொள்ளும் நிலையில் இடையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விறுவிறுப்பாக கொடுத்திருந்தார் லிங்குசாமி. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பையா 2 படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











