தமிழில் அறிமுகமாகும் மயிலு மகள் ஜான்வி கபூர்... ஹீரோ யார் தெரியுமா?

சென்னை : நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பையா. இதில், கார்த்தி, தமன்னா, மிலின்ட் சோமன், சோனியா தீப்தி,ஜெகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அழகான காதல் கதையைக் கொண்ட இப்படத்தில் கார்த்தி, தமன்னாவுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

அழகான காதல் கதை

அழகான காதல் கதை

வேலை தேடி பெங்களூர் போகும் கார்த்தி, அங்கு தமன்னா எதர்ச்சையாக சந்திக்கிறார். அவரின் அழகைப் பார்த்து மயங்கி அவரை காதலிக்கிறார். இதையடுத்து, தமன்னா, தன்னை மும்பைக்கு கொண்டுபோய் விட முடியுமா என கார்த்தியிடம் உதவி கேட்கிறார். இதையடுத்து நண்பரின் காரை எடுத்து மும்பை செல்கிறார் கார்த்தி. அந்தப் பயணத்தின்போது ஹீரோயினை ஒரு கும்பலும் ஹீரோவை ஒரு கும்பலும் துரத்த, அவர்களிடமிருந்து தமன்னாவை காப்பாற்றி காதலிலும் வெற்றி அடைகிறார் கார்த்தி.

பையா 2

பையா 2

யுவன்சங்கர் ராஜாவின் அட்டகாசமான இசையில் அனைத்துப்பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஹிட்டடித்தது. பையா படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க இயக்குநர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாம் பாகத்தில் ஜான்வி கபூர்

இரண்டாம் பாகத்தில் ஜான்வி கபூர்

பையா முதல் பாகத்தில் நடித்த கார்த்தி, தமன்னாவின் கெமிஸ்டிரி பக்காவாக வொர்க் அவுட் ஆகி இருந்த நிலையில், பையா இரண்டாம் பாகத்தில் ஆர்யா, நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்திய படமாக

பான் இந்திய படமாக

ஏராளமான பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், சமீபத்தில் கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இப்படம் தமிழைப்போல நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்த ஜான்வி கபூர் பையா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், பான் இந்திய படமாக எடுக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X