தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
சென்னை: லிங்குசாமி தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவர் இயக்கிய ரன், பையா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. குடும்ப பாங்கான படத்தை எடுத்து கவனம் ஈர்த்தவர் ரன் படத்தின் மூலம் தனது பாதையை கமர்ஷியலுக்கு திருப்பிக்கொண்டார். அஞ்சான் படத்திலிருந்து அவரது கிராஃப் அதள பாதாளத்திற்கு சென்றது. அப்போதிருந்து இப்போதுவரை அவரால் எழவே முடியவில்லை. அவரது இயக்கத்தில் கடைசியாக தி வாரியர் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. முதல் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது. அதேபோல் அவர் இயக்கிய சண்டக்கோழி படம் விஷாலின் கரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அஞ்சானில் விழுந்த அடி: முன்னணி இயக்குநராக வலம் வந்த லிங்குசாமி சூர்யா, சமந்தா நடிப்பில் உருவான அஞ்சான் படத்தில் சறுக்கினார். படத்துக்கு முன்பாக அவர் கொடுத்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் சுமாராக இருந்ததால் லிங்குசாமியை வறுத்தெடுத்தனர் ரசிகர்கள். அப்போது விழுந்தவர் இன்றுவரை எழவில்லை. மேலும் உத்தமவில்லனும் படுதோல்வியை சந்தித்ததால் இக்கட்டான நிலைக்கு சென்றால் லிங்குசாமி.
எண்ணி ஏழு நாள்: இதற்கிடையே கார்த்தி, சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை இயக்குவதற்கு அவர் முடிவு செய்தார். அதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்றார் லிங்குசாமி. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை எண்ணி ஏழு நாள் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
எழ முடியாத லிங்குசாமி: நிலைமை இப்படி இருக்க ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, மறுபக்கம் தான் இழந்த ஃபார்ம் என லிங்குசாமி அடி மேல் அடி வாங்கினார். இதன் காரணமோ என்னமோ தெரியவில்லை அவரால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. முக்கியமாக அஞ்சான் திரைப்படம் அவரை கடுமையான ட்ரோல் மெட்டீரியல் ஆக்கியது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.
லிங்குசாமி பேட்டி: இந்நிலையில் நடிகை தமன்னா குறித்து சமீபத்தில் லிங்குசாமி அளித்த பேட்டியில், "பையா படம் எடுக்கப்பட்டபோது இருந்தா சார்மிங் மற்றும் க்யூட்டான தமன்னாதான் பையா படத்தின் இரண்டாவது பாகத்துக்கு வேண்டும். அப்படி இல்லை என்றால் பையா 2வின் கதை சரியாக இருக்காது என்று குறிப்பிட்டார்.
ரீ ரிலீஸ் ஆன பையா: சில நாட்களுக்கு முன்புதான் பையா திரைப்படம் ரீ ரிலீஸானது. முதன்முறை ரிலீஸானபோது எப்படிப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதே அளவு ரெஸ்பான்ஸ் ரீ ரிலீஸுக்கும் கிடைத்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பழைய லிங்குசாமியாக அவர் வர வேண்டுமென்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











