Director Lingusamy: பையா 2 படத்தில் நடிக்க நோ சொன்ன கார்த்தி.. வெளிப்படுத்திய இயக்குநர்!
சென்னை: நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் பையா. இயக்குனர் லிங்குசாமி கேரியரில் இந்த படம் மிகவும் பெஸ்டாக அமைந்தது. கார்த்திக்கும் சிறப்பாக கை கொடுத்தது. இந்தப்படத்தின் மூலம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்று அதிக பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை தமன்னா . படத்தில் அவரது கவர்ச்சி தூக்கலாகவே காணப்பட்டது.
பையா படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி வரும் சூழலில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் லிங்குசாமி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை உருவாக்கி விட்டதாகவும் படத்தில் நடிக்க கார்த்தி தயக்கம் காட்டுவதாகவும் லிங்குசாமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி. தமன்னா, ஜெகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான பையா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரோட் டிராவல் மற்றும் காதலை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தில் ஒரு கார், துறுதுறு கார்த்தி மற்றும் அழகான தமன்னா ஆகியோரை மையமாக வைத்து படத்தின் கதைகளத்தை உருவாக்கியிருந்தார் லிங்குசாமி. மிகவும் பிரஷ்ஷான திரைக்கதையை இந்த படத்தில் அவர் இணைத்திருந்தார். படத்தின் சக்சஸ்க்கு முக்கியமான காரணமாக யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பாடல்களும் அமைந்திருந்தன.
ரோட் டிராவல் படம்: சென்னையிலிருந்து மும்பைக்கு சாலை வழியாக காரில் பயணிக்கும் கார்த்தி மற்றும் தமன்னா அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகள் படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்தன. பருத்திவீரன் போன்ற கிராமத்து சப்ஜெக்ட்டில் நடித்திருந்த கார்த்திக்கு நகரத்து இளைஞனாக இந்தப்படம் மிகவும் அதிகமான வரவேற்பை பெற்று தந்தது. கார்த்தி அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் நடிப்பதற்கு இந்தப் படமே தைரியத்தை கொடுத்தது என்று கூறலாம். இந்தப் படம் தற்போது 14 ஆண்டுகள் கழித்து சில தினங்களில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இந்தப் படத்தின் 2வது பாகத்திற்கான கதையும் உருவாகியுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
நோ சொன்ன கார்த்தி: இந்தப் படத்தில் நடிப்பதற்காக தான் நடிகர் கார்த்தியை கதையுடன் அணுகியதாகவும் லிங்குசாமி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க கார்த்தி தயக்கம் காட்டுவதாகவும் கூறியுள்ளார். தற்போது தன்னுடைய முகத்தில் முதிர்ச்சி காணப்படுவதாகவும் ஒரு குழந்தைக்கு தந்தையாக தான் படங்களில் நடித்து விட்டதாகவும் கார்த்தி கூறியதாகவும் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பையா 2 படம் கண்டிப்பாக விரைவில் ஷூட்டிங் துவங்கப்படும் என்று லிங்குசாமி உறுதி தெரிவித்துள்ளார். கார்த்திக்கு பதிலாக புது ஹீரோ மற்றும் புதிய ஹீரோயின் இந்த படத்தில் இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
விரைவில் பையா 2: கண்டிப்பாக இந்த படத்தில் கார் பிரதான இடத்தை பிடிக்கும் என்றும் லிங்குசாமி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். பையா 2வில் கார் இருக்கும் ஆனால் அதில் புதிய காதலர்கள் பயணிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் பையா படத்தை கொண்டாடியதற்கு மிக அதிகமான காரணங்கள் இருந்தன. ஆக்ஷன், காமெடி, காதல், நய்யாண்டி, டிராவல் என இந்தப் படத்தில் ஏராளமான சிறப்பம்சங்கள் காண்பபட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தினை மீண்டு திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











